×

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அண்ணன் வீட்டில் நடந்த சோதனையில் ஒரு கிலோ தங்கம் பறிமுதல்

திருச்சி: முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அண்ணன் வீட்டில் நடந்த சோதனையில் ஒரு கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திருச்சி எடமலைப்பட்டிபுதூரில் உள்ள விஜயபாஸ்கர் சகோதரர் உதயகுமார் வீட்டில் ஒரு கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே உதயகுமார் வீட்டில் இருந்து ரூ.1,06,000 பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீஸ் காலையில் கைப்பற்றியது. உதயகுமாரிடம் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் அவரை போலீஸ் இலுப்பூருக்கு அழைத்து சென்று விசாரித்து வருகிறது. உதயகுமாருக்கு சொந்தமான வாகனங்களில் இருந்தும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. உதயகுமாருடன் தொடர்பில் உள்ள ஒப்பந்ததாரர் தர்மலிங்கம் என்பவரிடமும் லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணை நடத்துகின்றனர். பல்வேறு இடங்களை வாங்கி கொடுத்த தரகராக தர்மலிங்கம் செயல்பட்டதாக விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. ஒப்பந்ததாரர் தர்மலிங்கத்திடம் இருந்துதான் உதயகுமார் வீட்டுக்கான சாவிகளை பெற்று சோதனை நடத்தியது லஞ்ச ஒழிப்புத்துறை….

The post முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அண்ணன் வீட்டில் நடந்த சோதனையில் ஒரு கிலோ தங்கம் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : minister ,Vijayabaskar Annan ,Trichy ,Trichy Edamalaipattiputhur ,Former Minister ,Dinakaran ,
× RELATED ஓபிஎஸ் அணியில் இருந்து கு.ப.கிருஷ்ணன் விலகல்; பரபரப்பு குற்றச்சாட்டு