×

சட்டக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை

 

சேலம்: தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளில் 2023-24 கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு, ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த ஐந்தாண்டு பட்டப்படிப்புகளான பிஏ.எல்எல்பி, பிபிஏ.எல்எல்பி, பிகாம்.எல்எல்பி, பிசிஏ.எல்எல்பி உள்ளிட்ட படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம். பொதுப்பிரிவைச் சேர்ந்தவர்கள் விண்ணப்ப கட்டணமாக ரூ.1000 மற்றும் எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.500 செலுத்த வேண்டும்.

அதே போல் சட்ட பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளில் சேர, பொதுப்பிரிவைச் சேர்ந்தவர்கள் விண்ணப்ப கட்டணமாக ரூ.500 மற்றும் எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.250 செலுத்த வேண்டும். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வரும் 31ம் தேதி கடைசி நாளாகும். இது குறித்த விவரங்களை www.tndalu.ac.in என்ற பல்கலைக்கழக இணையதளம் வாயிலாக தெரிந்து கொள்ளலாம். அதே போல் எல்எல்பி மூன்றாண்டு படிப்பு மற்றும் எல்எல்எம் இரண்டாண்டு படிப்பிற்கு விரைவில் சேர்க்கை அறிவிப்பு வெளியாகும் என பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

The post சட்டக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை appeared first on Dinakaran.

Tags : College ,Salem ,Tamilnadu ,Dr. ,Ambedkar Law University ,Dinakaran ,
× RELATED கல்லூரியில் இருந்து டிசியை...