×

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில் புகார்கள் பெறப்பட்டால் கடும் நடவடிக்கை

 

புதுக்கோட்டை: முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில் ஏதேனும் புகார்கள் பெறப்பட்டால் சம்பந்தப்பட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் கவிதாராமு தெரிவித்தார். தமிழ்நாடு முதலமைச்சர், விதி 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பின்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரகம் மற்றும் பேரூராட்சிகளில் செயல்படும் தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் நடத்தப்படும் பள்ளிகள் உட்பட 1326 பள்ளிகளில் 1 முதல் 5 வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு தமிழக முதலமைச்சரின் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. முதலமைச்சரின் காலை திட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழு மகளிர் உறுப்பினர்களை உரிய விதிமுறைகளுக்கு உட்பட்டு பணியமர்த்திட மகளிர் உறுப்பினர் 10ம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் மகளிர் உறுப்பினரின் மகன் அல்லது மகள் சம்பந்தப்பட்ட தொடக்கப்பள்ளியில் படித்துக் கொண்டிருக்க வேண்டும். தொடக்கப் பள்ளியில் தொடக்க வகுப்பை விட்டு அவரது மகன் அல்லது மகள் நீங்கி செல்லும் போது அவருக்கு பதிலாக வேறு ஒரு தகுதியுடைய மகளிர் குழு உறுப்பினர் தேர்வு செய்யப்படுவர். இப்பணியானது முற்றிலும் தற்காலிகமானது. மேலும், உணவு சமைப்பதற்கு மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர் தேர்வு செய்யப்படுவதில் ஏதேனும் கையூட்டு மற்றும் பணம் கேட்பதாக ஏதேனும் புகார்கள் பெறப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் கவிதா ராமு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

The post முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில் புகார்கள் பெறப்பட்டால் கடும் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Pudukottai ,Dinakaran ,
× RELATED புதுக்கோட்டையில் சுட்டெரிக்கும்...