×

பர்கூர் வேளாங்கண்ணி மாணவர்கள் பிளஸ்2 தேர்வில் 100 சதவீத தேர்ச்சி

 

கிருஷ்ணகிரி: பர்கூர் வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 2022-23ம் கல்வியாண்டில் பிளஸ்2 அரசு பொதுத் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளி என்ற பெருமையை சேர்த்துள்ளனர். இதில், கார்த்திக் விஜய் என்ற மாணவர் 600க்கு 595 மதிப்பெண்கள் பெற்ற மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். கிரேஸ் கிருஸ்டி 594, துளசிஸ்ரீ 594 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும், சுவாதி 593 மற்றும் சந்தியா 593 மதிப்பெண்கள் பெற்று 3ம் இடத்தையும், முகேஷ்வர் 592 மதிப்பெண்கள் பெற்று 4ம் இடத்தையும், கவிப்பிரியா 590 மதிப்பெண்கள் பெற்று 5ம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

சாதனை படைத்த மாணவர்களுக்கு பள்ளியில் பாராட்டு விழா நடந்தது. இதில் பள்ளியின் தாளாளர் கூத்தரசன் பங்கேற்று, மாணவர்களுக்கு சால்வை அணிவித்து, கேடயங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், முதல்வர் மெரினா பலராமன், வேப்பனஹள்ளி முதல்வர் அன்பழகன், துணை முதல்வர் ஜலஜாக்ஷி, திருப்பத்தூர் பள்ளி துணை முதல்வர் பூங்காவனம், நிர்வாக அலுவலர் கவுரிசங்கர், பள்ளியின் பொறுப்பாளர் யுவராஜ், துறை தலைவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர். இப்பள்ளி பிளஸ்2 பொதுத்தேர்வில் 20 ஆண்டுகளாக 100 சதவீதம் தேர்ச்சி பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

The post பர்கூர் வேளாங்கண்ணி மாணவர்கள் பிளஸ்2 தேர்வில் 100 சதவீத தேர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Parkur Velankanni ,Plus2 ,Krishnagiri ,Parkur Velankanni Matriculation High School ,
× RELATED நெல்லையில் கட்டுக்கடங்காத கூட்டம்;...