×

பையூரில் திமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்

 

காவேரிப்பட்டணம்: காவேரிப்பட்டணம் ஒன்றியம், பையூரில் பெரியார் சிலை அருகில் அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் தேங்காய் சுப்பிரமணி தலைமை வகித்தார். அவைத்தலைவர் பையூர் இளங்கோ வரவேற்றார். துணை செயலாளர் பரமசிவம், தமிழரசன், பொருளாளர் துரை பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக திமுக மாவட்ட செயலாளரும், பர்கூர் எம்எல்ஏவுமான மதியழகன் கலந்து கொண்டு திமுக ஆட்சியின் 2 ஆண்டு சாதனைகளையும், முதல்வரின் மக்கள் நலத்திட்டங்களை பட்டியலிட்டு பேசினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் தட்ரஅள்ளி நாகராஜன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மணிமேகலை நாகராஜன், மாவட்ட துணைச் செயலாளர் கோவிந்தசாமி, சாவித்திரி கடலரசு மூர்த்தி, பொதுக்குழு அஸ்லாம், பேரூராட்சி தலைவர் அம்சவேணி செந்தில்குமார், துணை தலைவர் மாலினி மாதையன், நகர செயலாளர் பாபு, மாவட்ட வர்த்தக அணி மணி விஜயன், திமுக பிரமுகர் அன்பரசு, வழக்கறிஞர் மதியழகன், ருத்ரமணி, ராஜா, பார்வதி சரவணன் உள்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். திமுகவில் புதிதாக சேர்ந்த 11,000 பேரின் உறுப்பினர் சேர்க்கை படிவத்தை மாவட்ட செயலாளரிடம் ஒன்றிய செயலாளர் சுப்பிரமணி வழங்கினார். பையூர் பாரி நன்றி கூறினார்.

The post பையூரில் திமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் appeared first on Dinakaran.

Tags : DMK government ,Byur ,Kaveripatnam ,Periyar ,Baiyur ,Union ,Biyur ,Dinakaran ,
× RELATED கிருஷ்ணகிரி பையூரில் 11 செ.மீ.மழை பதிவு..!!