×

பாலத்தில் இருந்து பஸ் கவிழ்ந்து 24 பேர் பலி

போபால்: மத்தியபிரதேச மாநிலத்தில் பாலத்தில் தடுப்பு சுவர்களை உடைத்துக் கொண்டு பஸ் கீழே விழுந்து கவிழ்ந்த விபத்தில் 24 பேர் பலியாகினர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மத்தியபிரதேச மாநிலம் கார்கோன் மாவட்டத்தில் தான்கர்கான் கிராமத்தின் அருகே உள்ள போரத் ஆற்றின் குறுக்கே தசன்கா பாலத்தில் பயணிகள் பஸ் ஒன்று நேற்று காலை 8.30 மணி அளவில் சென்று கொண்டிருந்தது. பஸ்சில் 50 பேர் பயணம் செய்த நிலையில், திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி உடைத்து கீழே விழுந்தது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 24 பயணிகள் பலியாகினர்.

20க்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் கார்கோன் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில் பலியானோருக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். பலியானோர் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரண உதவித்தொகை வழங்கப்படும் என மோடி அறிவித்துள்ளார். மாநில அரசு தரப்பில் பலியானோர் குடும்பத்திற்கு ரூ.4 லட்சமும் படுகாயமடைந்தோருக்கு ரூ.50 ஆயிரமும், லேசான காயமடைந்தோருக்கு ரூ.25 ஆயிரமும் நிவாரணம் வழங்கப்படும் என மத்தியபிரதேச மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார்.

The post பாலத்தில் இருந்து பஸ் கவிழ்ந்து 24 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Bopal ,Madhea Pradesh ,
× RELATED போபால் கூட்டம் ரத்தான நிலையில் 5 மாநில...