×

தென்பெண்ணை ஆற்றில் சாயக்கழிவு கலக்காமல் பாதுகாக்கப்படும்: அமைச்சர் உறுதி

புதுக்கோட்டை: தமிழ்நாடு சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மெய்யநாதன் நேற்று புதுக்கோட்டையில் அளித்த பேட்டி: தமிழ்நாட்டில் புதிதாக 25 மணல் குவாரிகள் திறக்கப்பட்டுள்ளதால் சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. மணல் குவாரிகளில் சிசிடிவி கேமராக்கள் வைத்து, அதிக ஆழத்திற்கு மணல் அல்லாமல் இருப்பதற்கு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.

கர்நாடக மாநிலத்தில் இருந்து சாயக்கழிவுகள் தென்பண்ணையாற்றில் கலப்பதை தடுப்பதற்கு அரசு முதன்மை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். முறையாக கர்நாடக மாநிலம், சுத்திகரிப்பு பணிகளை விரைவில் மேற்கொள்ள உள்ளது. தென்பெண்ணை ஆற்றில் சாயக்கழிவுகள் கலக்காமல் பாதுகாக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

The post தென்பெண்ணை ஆற்றில் சாயக்கழிவு கலக்காமல் பாதுகாக்கப்படும்: அமைச்சர் உறுதி appeared first on Dinakaran.

Tags : Tenpenna river ,Pudukottai ,Tamil Nadu Environment ,Minister ,Meiyanathan ,Tamil Nadu ,
× RELATED வெப்ப அலை எதிரொலி; புதுக்கோட்டை அரசு...