×

மின் கம்பியை மிதித்த விவசாயி பரிதாப சாவு

வத்திராயிருப்பு, மே 10: வத்திராயிருப்பு அருகே இராமசாமியாபுரம் மேலத்தெருவைச் சேர்ந்தவர் பெரியசாமி(65). விவசாயி. இவர் நேற்று மாலை பூரிகுளத்தில் உள்ள தனது வயலுக்கு சென்றார். அப்போது மின் வயர் அறுந்து கிடைந்தது தெரியாமல் கால் வைத்தார். இதில் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். போலீசார் அவரது உடலை மீட்டு வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கூமாப்பட்டி போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை செய்து வருகின்றனர்.

The post மின் கம்பியை மிதித்த விவசாயி பரிதாப சாவு appeared first on Dinakaran.

Tags : Vathirairipu ,Periyasamy ,Ramasamiyapuram Meletheru ,Purikulam ,
× RELATED வத்திராயிருப்பு அத்திகோயிலில் மாந்தோப்பை சூறையாடிய காட்டு யானைகள்