
- மதுரை கார்ப்பரேஷன்
- மேற்கு மண்டல குருதிதீர் முகாம்
- மதுரை
- மேற்கு மண்டல குருதீர் முகாம்
- திருப்பரங்குன்றம். ...
- மேற்கு மண்டலம்
- கரடிதீர் முகாம்
- தின மலர்
மதுரை, மே 10: மதுரை மாநகராட்சி மேற்கு மண்டல குறைதீர் முகாம் திருப்பரங்குன்றத்தில் உள்ள மண்டல அலுவலகத்தில் நேற்று நடந்தது. மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமை வகிக்க, ஆணையாளர் சிம்ரன்ஜீத்சிங் முன்னிலை வகித்தார். முகாமில் சொத்துவரி பெயர் மாற்றம், புதிய சொத்து வரி- சொத்து வரி தொடர்பாக 20 மனு, காலி மனை வரி 5 மனு, பாதாளச்சாக்கடை அடைப்பு சரிசெய்ய 10 மனு, குடிநீர் வசதிக்கு 5 மனு மற்றும் ஆக்கிரமிப்பு அகற்றம், சாலை வசதி, தெருவிளக்கு வசதி கேட்டு 45 மனு என மொத்தம் 85 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன.
இம்முகாமில் குடிநீர் வரியில் பெயர் திருத்தம் வேண்டி விண்ணப்பித்த மனுதாரருக்கு உடனடி அனுமதி ஆணை வழங்கப்பட்டது. இதில் மண்டல தலைவர் சுவிதாவிமல், உதவி ஆணையாளர் சையது முஸ்தபா கமால், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், நிர்வாக அலுவலர் ஆறுமுகம், உதவி வருவாய் அலுவலர் ராஜ்குமார், கண்காணிப்பாளர் செல்வகுமார், சுகாதார அலுவலர் விஜயகுமார், கவுன்சிலர்கள் ரவிசந்திரன், இந்திராகாந்தி, சிவசக்தி ரமேஷ், உசிலை சிவா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
The post மதுரை மாநகராட்சி மேற்கு மண்டல குறைதீர் முகாமில் குடிநீர் வரியில் பெயரை திருத்தி உடனே ஆணை appeared first on Dinakaran.