×

நிதி நிறுவனம் நடத்தி பல கோடி மோசடி சேலம் பாஜ பிரமுகர் மகன் கைது: 6 மாதம் தலைமறைவாக இருந்தவர் சிக்கினார்

சேலம்: தமிழகம் முழுவதும் நிதி நிறுவனம் நடத்தி பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட சேலம் பாஜ பிரமுகரின் மகனை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்தனர். 6 மாதமாக தலைமறைவாக இருந்த நிலையில் போலீஸ் பிடியில் சிக்கினார். சேலம் தாதகாப்பட்டி குமரன் நகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (51), பாஜ பிரமுகர். இவர், சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே ‘ஜஸ்ட் வின் ஐடி டெக் இந்தியா பிரைவேட் லிமிடெட்’ என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தினார். இந்நிறுவனத்தின் கிளைகளை வேலூர், திருவண்ணாமலை, திருச்சி, நீலகிரி, கன்னியாகுமரி என தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஏற்படுத்தி ரூ. 1 லட்சம் முதலீடு செய்தால் மாதந்தோறும் ரூ. 20 ஆயிரம் வீதம் 12 மாதங்களுக்கு தருவதாக கூறி பொதுமக்களிடம் இருந்து முதலீடுகளை திரட்டி பல கோடி ருபாய் மோசடி செய்து உள்ளனர்.

இதுகுறித்து சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில், திருச்சியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ஜெயராஜ் ஒரு புகார் கொடுத்தார். போலீசார் விசாரணை நடத்தி, பாஜ பிரமுகர் பாலசுப்பிரமணியம், அவரது மகன் வினோத்குமார் ஆகியோர் மீது ேமாசடி வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து பாலசுப்பிரமணியத்தை கைது செய்ததோடு, மாநிலம் முழுவதும் உள்ள அவரது அலுவலகங்களில் சோதனை நடத்தி ஆவணங்களை கைப்பற்றினர். இவ்வழக்கில் இதுவரை 110 பேர், ரூ. 2.50 கோடி மோசடி செய்துள்ளதாக ஆவணங்களுடன் புகார் கொடுத்துள்ளனர். அதன்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதுபோக ஆன்லைனில் 1000க்கும் மேற்பட்டோர் பாலசுப்பிரமணியம், வினோத்குமார் மீது மோசடி புகார் மனுக்களை அனுப்பியுள்ளனர்.அவர்களை நேரில் வந்து உரிய ஆவணங்களுடன் புகார் அளிக்க சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர். இந்நிலையில்,இவ்வழக்கில் கடந்த 6 மாதமாக தலைமறைவாக இருந்த பாஜ பிரமுகர் பாலசுப்பிரமணியத்தின் மகன் வினோத்குமாரை நேற்று முன்தினம் சேலத்தில் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் நடத்தினர்.

The post நிதி நிறுவனம் நடத்தி பல கோடி மோசடி சேலம் பாஜ பிரமுகர் மகன் கைது: 6 மாதம் தலைமறைவாக இருந்தவர் சிக்கினார் appeared first on Dinakaran.

Tags : Salem Bajaj ,Salem ,Tamil Nadu ,
× RELATED அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்