×

திருப்பூர் இன்பேன்ட் ஜீசஸ் பள்ளி 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி

 

திருப்பூர், மே 10: திருப்பூர் இன்பேன்ட் ஜீசஸ் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் பிளஸ்-2 பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். திருப்பூர் குமார் நகரில் செயல்பட்டு வரும் இன்பேன்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பிளஸ்-2 பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சிப்பெற்று சாதனை படைத்துள்ளது. மாணவர்கள் பிரேம் பாலாஜி 600-க்கு 596 மதிப்பெண்களும், ஆதர்ஷ் 589 மதிப்பெண்களும், தர்ஷன் பிரணவ் 588 மதிப்பெண்களும் பெற்று முதல் 3 இடங்களை பிடித்தனர்.

1 மாணவர் கணிதத்திலும், 2 மாணவர்கள் இயற்பியலிலும், 3 மாணவர்கள் வேதியியலிலும், 1 மாணவர் உயிரியலிலும், 8 மாணவர்கள் கணக்குப்பதிவியலிலும், 5 மாணவர்கள் வணிகவியலிலும், 5 மாணவர்கள் பொருளாதாரத்திலும், 1 மாணவர் வணிக கணிதத்திலும். 1 மாணவர் கம்ப்யூட்டர் அப்ளிகேஷனிலும், 11 மாணவர்கள் கணினி அறிவியலிலும் 100க்கு 100 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளனர்.

இதில் பள்ளி அளவில் முதலிடம் பிடித்த பிரேம் பாலாஜி கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய பாடங்களில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இதேபோல் மூன்றாம் இடம் பிடித்த தர்ஷன் பிரணவ் கணக்குப்பதிவியல் பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளார். வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளை பள்ளித் தாளாளர் அருட்தந்தை எட்வர்ட் ஞானசேகர், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் பாராட்டினர்.

The post திருப்பூர் இன்பேன்ட் ஜீசஸ் பள்ளி 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Tirupur Infant Jesus School ,Tirupur ,Tirupur Infant Jesus Matric School ,Dinakaran ,
× RELATED திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்...