×

வருவாய்த்துறை வாயிலாக வழங்கப்படும் சான்றிதழை மாணவர்களுக்கு உடனே வழங்க வேண்டும்: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் உத்தரவு

சென்னை: மாணவ, மாணவிகளுக்கு வருவாய்த்துறையின் வாயிலாக வழங்கப்படும் சான்றிதழ்களை உடனடியாக வழங்க அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாடு முதல்வர் மாணவ, மாணவிகள் தங்களுடைய உயர்கல்வியை தொடர்வதற்கு ஏதுவாக, வருவாய் துறையின் மூலம் வழங்கப்பட்டு வரும் சாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், மற்றும் வருமான சான்றிதழ் ஆகியவற்றை முன்னுரிமை கொடுத்து உடனடியாக வழங்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சி தலைவர்களையும் அறிவுறுத்தி உள்ளார்.

இந்த சான்றிதழ் அனைத்தும் இணைய வழியாக வழங்கப்பட்டு வருகின்றன. எனவே, மாணவ, மாணவிகள் இணைய வழியாக விண்ணப்பித்து தேவையான சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம். மேலும், சான்றிதழ்களை எவ்வித காலதாமதமுமின்றி வருவாய் வட்டாட்சியர்கள், வருவாய் கோட்டாட்சியர்கள் உடனடியாக வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post வருவாய்த்துறை வாயிலாக வழங்கப்படும் சான்றிதழை மாணவர்களுக்கு உடனே வழங்க வேண்டும்: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Minister KKSSR Ramachandran ,CHENNAI ,Minister ,KKSSR Ramachandran ,Dinakaran ,
× RELATED ஆடுகளை தாக்கும் தொற்று நோய்களை தடுப்பது எப்படி?