×

பிளஸ்2 தேர்வில் 600க்கு 600 மதிப்பெண் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார் மாணவி நந்தினி

சென்னை: பிளஸ் 2 தேர்வில் அனைத்து பாடங்களிலும் முழு மதிப்பெண் (600க்கு 600) பெற்ற மாணவி நந்தினி முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இதில் மாநிலம் முழுவதும் 94.03 சதவிகிதம் மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 96.38 சதவிகிதமும், மாணவர்கள் 91.45 சதவிகிதமும் தேர்ச்சி பெற்றனர். திண்டுக்கல், அண்ணாமலையார் மில்ஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் வணிகவியல் மாணவி நந்தினி அனைத்து பாடங்களிலும் முழு மதிப்பெண் 600க்கு 600 பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்று வரலாற்று சாதனை படைத்தார்.

இதையடுத்து, மாணவி நந்தினி முதல்வரை தன் பெற்றோர் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியையுடன் நேற்று முகாம் அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின், மாணவியிடம் உயர்கல்வி பயில்வதற்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று தெரிவித்தார். நிகழ்வின்போது, பள்ளிக்கல்வித் துறை செயலாளர் காகர்லா உஷா, ஆணையர் நந்தகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.

The post பிளஸ்2 தேர்வில் 600க்கு 600 மதிப்பெண் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார் மாணவி நந்தினி appeared first on Dinakaran.

Tags : Nandini ,Chief Minister ,M.K.Stalin. ,Chennai ,Principal ,M.K.Stalin ,
× RELATED கடந்த மூன்றாண்டுகளில் தொழிலாளர்களின்...