×

மேற்கத்திய நாடுகளின் பிணைக்கைதியாக உக்ரைன் மாறி விட்டது: ரஷ்ய அதிபர் புடின் குற்றச்சாட்டு

மாஸ்கோ: மேற்கத்திய நாடுகளின் பிணைக்கைதியாக உக்ரைன் மாறி விட்டதாக ரஷ்ய அதிபர் புடின் குற்றம்சாட்டியுள்ளார். நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணை வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ரஷ்யா உக்ரைன் மீது கடந்த ஒன்றரை ஆண்டாக போர் தொடுத்து வருகிறது. இந்த நிலையில், 1947ம் ஆண்டு இரண்டாம் உலகப் போரில் ஹிட்லர் தலைமையிலான ஜெர்மனியின் நாஜிக் படைகளை தோற்கடித்ததன் வெற்றிதினக் கொண்டாட்டம் ரஷ்யாவில் நேற்று நடைபெற்றது.

மாஸ்கோவில் உள்ள செஞ்சதுக்கத்தில் ரஷ்யாவின் வெற்றிதினக் கொண்டாட்டத்தில் பேசிய ரஷ்ய அதிபர் புடின், “தற்போது நடக்கும் போர் திணிக்கப்பட்ட போராகும். ரஷ்யாபோபியாவால் பாதிக்கப்பட்டுள்ள மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக போரை தூண்டி விடுகின்றன. மேற்கத்திய நாடுகளின் பிணைக்கைதியாக உக்ரைன் மாறி விட்டது. ரஷ்யாவுக்கு எதிரான உண்மையான போர் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. அமைதியான எதிர்காலத்தையே ரஷ்யா விரும்புகிறது. ஆனால் எதிரிகள் எங்களை அழிப்பதையே நோக்கமாக கொண்டுள்ளனர்” என்று தெரிவித்தார்.

The post மேற்கத்திய நாடுகளின் பிணைக்கைதியாக உக்ரைன் மாறி விட்டது: ரஷ்ய அதிபர் புடின் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Ukraine ,President ,Putin ,Moscow ,President Putin ,NATO ,Dinakaran ,
× RELATED ரஷ்ய அதிபர் புடினை போன்று ஜனநாயகத்தை...