×

சில்லிபாயிண்ட்…

* பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் கிளப் அணிக்காக விளையாடி வரும் மெஸ்ஸி, சவுதி அரேபியாவை சேர்ந்த பிரபல கால்பந்து கிளப் அணிக்காக விளையாட உள்ளதாகவும், இதற்காக மிகப் பெரிய தொகை அவருக்கு வழங்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. பிஎஸ்ஜி அணியுடனான ஒப்பந்தம் ஜூன் 30ம் தேதியுடன் முடிவடையும் நிலையில், அது நீட்டிக்கப்படாது என்று அணி நிர்வாகம் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

* மும்பை இந்தியன்ஸ் வேகப் பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் காயம் காரணமாக விலகி இங்கிலாந்து திரும்பிய நிலையில், சக ஆல் ரவுண்டர் கிறிஸ் ஜோர்டன் மும்பை அணியில் இணைந்துள்ளார்.

* ஆஸ்திரேலியா செல்லும் இந்திய மகளிர் ஹாக்கி அணியின் கேப்டனாக கோல் கீப்பர் சவிதா பூனியா நியமிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியா – இந்தியா மோதும் ஆட்டங்கள் மே 18, 20, 21 தேதிகளிலும், இந்தியா – ஆஸ்திரேலியா ஏ மோதும் ஆட்டங்கள் மே 25, 27லும் அடிலெய்டு தி மேட் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளன.

* இந்தியாவில் நடைபெற உள்ள ஐசிசி உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடரில் விளையாட ஆர்வமுடன் காத்திருப்பதாக நியூசிலாந்து வேகப் பந்துவீச்சாளர் டிரென்ட் போல்ட் கூறியுள்ளார்.

* அயர்லாந்து அணியுடன் செம்ஸ்போர்டு கவுன்டி மைதானத்தில் நேற்று நடந்த முதல் ஒருநாள் போட்டியில், வங்கதேசம் 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 246 ரன் எடுத்தது. முஷ்பிகுர் ரகிம் 61, நஜ்முல் ஷான்டோ 44, தவ்ஹித் ஹ்ரிதய், மெஹிதி ஹசன் மிராஸ் தலா 27 ரன் எடுத்தனர். அயர்லாந்து தரப்பில் ஜோஷ் லிட்டில் 3, மார்க் அடேர், கிரஹாம் ஹியூம் தலா 2, கேம்பர், டாக்ரெல் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

The post சில்லிபாயிண்ட்… appeared first on Dinakaran.

Tags : Sillypoint… ,Messi ,Paris St. Germain ,Saudi Arabia ,Sillypoint ,Dinakaran ,
× RELATED சில்லிபாயின்ட்..