×
Saravana Stores

செங்கோட்டை – நெல்லை வழித்தடத்தில் ரயில் வேகம் அதிகரிப்பால் அந்தியோதயா, இன்டர்சிட்டி எக்ஸ்பிரசுக்கு இணைப்பு கிடைத்தது: பயணிகள் மகிழ்ச்சி

நெல்லை: செங்கோட்டை – நெல்லை இடையே ரயில்களின் வேகம் கடந்த 7ம் தேதி முதல் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அந்தியோதயா மற்றும் இன்டர்சிட்டி ரயில்களுக்கு இணைப்பு கிட்டியுள்ளது. பாரம்பரிய வழித்தடமான செங்கோட்டை – நெல்லை வழித்தடத்தில் மின்மயமாக்கல் பணிகள் முடிந்து கடந்த 7ம் தேதி முதல் ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் ரயில்கள் 5 முதல் 20 நிமிடங்கள் முன்னதாக நெல்லை வந்து சேருகின்றன. ரயில்களின் வேகம் 70 கிமீட்டரில் இருந்து 110 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதால் அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நெல்லை – செங்கோட்டை இடையே காலை 7.00, 09.45, மதியம் 1.50, மாலை 6.15 என நான்கு பயணிகள் ரயில்களும், செங்கோட்டை – நெல்லை இடையே காலை 6.40, 10.05, மதியம் 2.55, மாலை 5.50 ஆகிய 4 பயணிகள் ரயில்களும், இரவு 11.30 மணிக்கு புறப்படும் நெல்லை – பாலக்காடு பாலருவி ரயிலும் தினசரி ரயில்களாக இயக்கப்பட்டு வருகின்றன.

நெல்லை – தாம்பரம், செங்கோட்டை – தாம்பரம், நெல்லை – மேட்டுப்பாளையம் ஆகிய வாராந்திர ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் காலை 7 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்படும் செங்கோட்டை ரயில் நெல்லை எக்ஸ்பிரஸ், அனந்தபுரி விரைவு ரயில், பெங்களூரு – நாகர்கோவில் ஆகிய ரயில்களுக்கும், காலை 9.45 மணிக்கு புறப்படும் நெல்லை – செங்கோட்டை ரயில் நாகர்கோவில் – கோவை, திருச்செந்தூர் – நெல்லை ஆகிய ரயில்களுக்கும், மதியம் 1.50 மணிக்கு புறப்படும் நெல்லை – செங்கோட்டை ரயில், பாலக்காடு – திருச்செந்தூர், திருச்செந்தூர் – பாலக்காடு ரயில்களுக்கும், மாலை 6.15 மணிக்கு புறப்படும் நெல்லை – செங்கோட்டை ரயில், கோவை – நாகர்கோவில், திருச்செந்தூர் – நெல்லை ரயில்களுக்கும் இணைப்பாக இப்போது உள்ளது.

காலை 6.40 மணிக்கு புறப்படும் செங்கோட்டை – நெல்லை ரயில், நாகர்கோவில் – கோவை, சென்னை குருவாயூர் ரயில்களுக்கும், காலை 10.05 மணிக்கு புறப்படும் செங்கோட்டை – நெல்லை ரயில், திருச்சி – திருவனந்தபுரம் இன்டர்சிட்டி , திருச்செந்தூர் – பாலக்காடு ரயில்களுக்கும், மாலை 2.55 மணிக்கு புறப்படும் செங்கோட்டை – நெல்லை ரயில் நாகர்கோவில் – தாம்பரம் அந்தியோதயா, நாகர்கோவில் – தாம்பரம் வாரம் மும்முறை ரயில்களுக்கும், மாலை 5.50 மணிக்கு புறப்படும் செங்கோட்டை – நெல்லை ரயில் நாகர்கோவில் – பெங்களூரு, சென்னை செல்லும் செந்தூர் எக்ஸ்பிரஸ், டெல்லி திருக்குறள், ஹௌரா ரயில்களுக்கும் இணைப்பாக தற்போது அமைந்துள்ளது.

இதுகுறித்து பயணிகள் கூறுகையில், ‘‘செங்கோட்டை – நெல்லை வழித்தடத்தில் பயணிக்கும் எங்களுக்கு தாம்பரம் – அந்தியோதயா ரயிலை பிடிக்க அதிகாரப்பூர்வ இணைப்பு கிடைத்துள்ளது மகிழ்ச்சி தருகிறது. இதுபோல திருவனந்தபுரம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலை பிடிப்பதற்கு அதிகாரப்பூர்வமாக அட்டவணையில் மாற்றம் செய்தால் வள்ளியூர், நாகர்கோவில், மார்த்தாண்டம், திருவனந்தபுரம் பகுதிகளுக்கு நேரடியாக செல்வதற்கு வசதியாக இருக்கும். இரவு சென்னை செல்லும் நெல்லை எக்ஸ்பிரஸ்க்கும் இணைப்பு ஏற்படுத்தினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.’’ என்றனர்.

The post செங்கோட்டை – நெல்லை வழித்தடத்தில் ரயில் வேகம் அதிகரிப்பால் அந்தியோதயா, இன்டர்சிட்டி எக்ஸ்பிரசுக்கு இணைப்பு கிடைத்தது: பயணிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Sengota-Nelly ,Antiodaya ,InterCity Express ,Paddy ,Chengkotta-Nelli ,Anthiodaya ,Chrykotta ,Antiothya ,Dinakaran ,
× RELATED ரயிலில் கடத்திய ரூ.28 லட்சம் ஹவாலா பணம்...