×

மல்யுத்த வீரர்கள் பாலியல் புகாரில் நடவடிக்கை எடுக்காதது குறித்து விளக்கமளிக்க டெல்லி காவல்துறைக்கு தேசிய மகளிர் ஆணையம் சம்மன்

டெல்லி: மல்யுத்த வீரர்கள் பாலியல் புகாரில் நடவடிக்கை எடுக்காதது குறித்து டெல்லி காவல்துறைக்கு மகளிர் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. வழக்கு தொடர்பாக மே. 12-ம் தேதி பிற்பகல் 2 மணிக்குள் டெல்லி காவல்துறை விளக்கம் தர மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷண் மீது பெண் மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் கூறியதால், அவர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது. அவரை பதவி நீக்கம் செய்யக் கோரியும், கைது செய்யக் கோரியும் டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த 2 வாரத்திற்கும் மேலாக மல்யுத்த வீரர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டத்திற்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆதரவு தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினும் தனது ஆதரவை தெரிவித்தார். மல்யுத்த வீரர்களின் போராட்டத்தை ஒடுக்க டெல்லி காவல்துறையினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்.

இந்நிலையில், மல்யுத்த வீரர்கள் பாலியல் புகாரில் நடவடிக்கை எடுக்காதது குறித்து டெல்லி காவல்துறைக்கு தேசிய மகளிர் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. மல்யுத்த வீரர் கூட்டமைப்பு தலைவர் மீது வழக்கு பதிவு நடவடிக்கை எடுக்காது குறித்து மகளிர் ஆணையம் கேள்வியெழுப்பியது. இந்த வழக்கு தொடர்பாக மே.12-ம் தேதி பிற்பகல் 2 மணிக்குள் டெல்லி காவல்துறை விளக்கம் தர மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

The post மல்யுத்த வீரர்கள் பாலியல் புகாரில் நடவடிக்கை எடுக்காதது குறித்து விளக்கமளிக்க டெல்லி காவல்துறைக்கு தேசிய மகளிர் ஆணையம் சம்மன் appeared first on Dinakaran.

Tags : National Commission for Women ,Delhi Police ,Delhi ,Women's Commission ,
× RELATED நாடாளுமன்ற பாதுகாப்பு அத்துமீறல் வழக்கு: கூடுதல் அவகாசம் கோரி போலீஸ் மனு