×

அபே எக்ஸ்ட்ரா எல்டிஎக்ஸ் கார்கோ

பியாஜியோ நிறுவனம், புதிய அபே எக்ஸ்ட்ரா எல்டிஎக்ஸ் கார்கோ என்ற பெயரில் மூன்று சக்கர சரக்கு வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் ஷோரூம் விலை மகாராஷ்டிராவில் சுமார் ரூ.2.51 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், 3 வால்வுகளுடன் கூடிய 230 சிசி ஏர் கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. சரக்கு ஏற்றும் பகுதி 5.5 அடி நீளம் கொண்டது.

பாலம் உள்ளிட்ட ஏற்றமான பகுதிகளிலும் எளிதாக சரக்குகளை இழுத்துச் செல்லும் திறன் படைத்தது எனவும், ஒரு கிலோ சிஎன்ஜிக்கு 40 கி.மீ மைலேஜ் வழங்கும் எனவும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக மணிக்கு 56 கி.மீ வேகம் வரை செல்லும். 36 மாதங்கள் அல்லது ஒரு லட்சம் கிலோ மீட்டர் வாரண்டி உண்டு எனவும் இந்த நிறுவனம் கூறியுள்ளது.

The post அபே எக்ஸ்ட்ரா எல்டிஎக்ஸ் கார்கோ appeared first on Dinakaran.

Tags : Piaggio ,Dinakaran ,
× RELATED கோடை வெயிலில் உடல் உஷ்ணத்தை தணிக்கும்...