×

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் செயல்படும் தலைமை செயலகத்தில் தீ விபத்து..!!

கேரளா: கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் அம்மாநில தலைமை செயலகம் அமைந்துள்ளது. இந்த தலைமை செயலகத்தில் வடக்கு பகுதியில் உள்ள கட்டிடத்தில் கேரளா தொழில் சட்டம் மற்றும் நற்குறை அமைச்சர் கூடுதல் தனிச்செயலர் வினோதின் அறை அமைந்துள்ளது. இன்று காலை திடீரென கூடுதல் தனிச்செயலர் வினோதின் அறையில் இருந்து தீ பற்றி எரிந்ததை பார்த்த ஊழியர்கள் இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.

இதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் மிகவும் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் எரிந்து சாம்பலானதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை அடுத்து தீ விபத்தின் காரணம் குறித்து தலைமை செயலக காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? யாராவது தீ வைத்துள்ளார்களா? என ஏற்கனவே விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏற்கபனவே தலைமை செயலகத்தில் கடந்த ஓராண்டிற்கு முன் தீ விபத்து ஏற்பட்டுள்ளதை அடுத்து இந்த தீ விபத்திற்கு நாசவேலைக்கு காரணமாக இருக்குமோ என்ற வண்ணத்திலும் சம்பவ இடத்தில் கேரளா காவல்துறையின் உயர் அதிகாரிகளும் சம்பவ இடத்தில விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் செயல்படும் தலைமை செயலகத்தில் தீ விபத்து..!! appeared first on Dinakaran.

Tags : Secretariat of Kerala ,Thiruvananthapuram ,Kerala ,Chief Secretariat ,Thiruvananthapuram, Kerala ,Secretariat of Kerala State of Thiruvananthapuram ,
× RELATED மோடியின் வருகையை முன்னிட்டு...