×

பொலிவியாவில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் நீச்சல் பயிற்சி: 2.30 மணி நேரத்தில் 7.5 கி.மீ. தூரத்தை கடந்து சாதனை..!!

பொலிவியா: பொலிவியாவில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ஏரியில் ஏராளமானோர் ஆர்வத்துடன் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டனர். பொலிவியாவில் டிடிகாகா ஏரியில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ஏராளமானோர் ஆர்வத்துடன் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டனர். அந்நாட்டில் உள்ள பழமையான டிடிகாகா ஏரியில் நடைபெற்ற பயிற்றின்போது சுமார் 4 முதல் 5 டிகிரி செல்ஸியஸ் வரை குளிர் நிலவியது. வீரர், வீராங்கனைகள் தண்ணீரை பிழித்துக்கொண்டு இலக்கை நோக்கி பயணித்து பயிற்சி மேற்கொண்டனர்.

7.5 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க 2.30 மணி நேரம் தண்ணீரில் நீந்தியதாக அவர்கள் கூறினர். நீச்சல் வீரர்களுக்கு உள்ளூர் மக்கள் வழிகாட்டியாக இருந்தனர். வழக்கத்தைவிட அதிக அளவில் குளிர் நிலவியதாக வீரர்கள் கூறினர். இந்த ஏரியில் நீந்தியது புதுவித மகிழ்ச்சியை அளித்ததாக அவர்கள் தெரிவித்தனர். பல்வேறு நாடுகளில் இருந்தும் ஏராளமான வீரர்கள், வீராங்கனைகள் இந்த ஏரிக்கு வந்து நீச்சல் பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம் என்று பொலிவியாவின் இயற்கை ஆர்வலர்கள் கூறினர்.

The post பொலிவியாவில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் நீச்சல் பயிற்சி: 2.30 மணி நேரத்தில் 7.5 கி.மீ. தூரத்தை கடந்து சாதனை..!! appeared first on Dinakaran.

Tags : Bolivia ,Lake Titicaca ,
× RELATED வடக்கு பொலிவியாவில் கொட்டித் தீர்த்த...