×

ஐபிஎல் இன்றைய போட்டியில் வான்கடே மைதானத்தில் மும்பை-ஆர்சிபி மோதல்

மும்பை: ஐபிஎல் டி20 தொடரில் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் 54வது லீக் போட்டியில் மும்பை-பெங்களூரு அணிகள் மோதுகின்றன.மும்பை 10 போட்டியில் 5 வெற்றி, 5 தோல்வி என்று 10 புள்ளிகளுடன் 8வது இடத்திலும், பெங்களூரு 10 போட்டியில் 5 வெற்றி, 5 தோல்வியுடன் 6வது இடத்திலும் உள்ளது. பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டும் என்றால் இரு அணிகளும் எஞ்சிய 4 லீக்கிலும் வெற்றி பெறவேண்டும். முந்தைய போட்டியில் சென்னையுடன் தோல்வியை தழுவிய மும்பை சொந்த ஊரில் வெற்றிப்பாதைக்கு திரும்ப வேண்டிய நெருக்கடியுடன் களம் காணுகிறது. கேப்டன் ரோகித் கடைசி 4 ஆட்டங்களில் ஒற்றை இலக்கத்தை கூட தாண்டவில்லை.

இதில் இரு `டக்-அவுட்’டும் அடங்கும். பேட்டிங்குக்கு சாதகமான வான்கடே மைதானத்தில் உள்ளூர் ரசிகர்களின் முன்னிலையில் அவர் மீண்டும் பார்முக்கு திரும்புவது அவசியம். பெங்களூரு அணியை பொறுத்தவரை விராட் கோஹ்லி (419 ரன்), டூ பிளஸ்சிஸ் (511 ரன்) தொடர்ந்து சீரான பேட்டிங்கை வெளிப்படுத்தினாலும், மிடில் வரிசை ஒருசேர கைகொடுக்காததால் ஆர்சிபி திணறுகிறது. குறிப்பாக அதிரடி மன்னன் மேக்ஸ்வெல் சில ஆட்டங்களில் மட்டுமே சிறப்பாக ஆடி உள்ளார். பந்து வீச்சில் எதிர்பார்க்கப்பட்ட சுழற்பந்து வீச்சாளர் ஹசரங்கா (7 ஆட்டத்தில் 7 விக்கெட்) இன்னும் முழுமையான திறமையை காட்டவில்லை. ஆர்சிபி ஒருங்கிணைந்து ஆவேசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் மும்பையை வீழ்த்தலாம்.

The post ஐபிஎல் இன்றைய போட்டியில் வான்கடே மைதானத்தில் மும்பை-ஆர்சிபி மோதல் appeared first on Dinakaran.

Tags : IPL ,Mumbai ,RCB ,Wankhede Stadium ,IPL T20 ,Bangalore ,Mumbai… ,Mumbai- ,Dinakaran ,
× RELATED ஜெய்ஷா தலைமையிலான பிசிசிஐ ஆலோசனைக் கூட்டம் நிறைவு பெற்றது!