×

கர்நாடகத்தில் தெருவிளக்குகளை அணைத்துவிட்டு வாக்காளர்களுக்கு பணம் விநியோகம்; பாஜக நிர்வாகிகளை கையும் களவுமாக பிடித்த தேர்தல் அதிகாரி..!!

பெங்களூரு: சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள கர்நாடகத்தில் தெரு விளக்குகளை அணைத்துவிட்டு வாக்காளர்களுக்கு பாஜக பணம் விநியோகம் செய்துள்ளது. வாக்காளர்களுக்கு நள்ளிரவில் பணம் விநியோகித்த பாஜக நிர்வாகிகளை தேர்தல் அதிகாரி கையும் களவுமாக பிடித்தார். குல்பர்கா சட்டப் பேரவை தொகுதியில் உள்ள சங்மேஷ் காலனியில் பாஜக நிர்வாகிகள் பணம் விநியோகித்த போது சிக்கினர். பணம் விநியோகித்த பாஜக நிர்வாகிகளை பிடித்த தேர்தல் அதிகாரி யஸ்வந்த் குருக்கர் வீடியோ ஆதாரத்தையும் வெளியிட்டுள்ளார்.

பணம் தந்த பாஜகவினரை கையும் களவுமாக பிடித்த அதிகாரி:

போலீசுக்கு கூட தகவல் தெரிவிக்காமல் தனி ஆளாக சென்று பாஜகவினரை மாவட்ட ஆட்சியரே கையும் களவுமாக பிடித்துள்ளார். பாஜக வேட்பாளர் படத்துடன் கூடிய நோட்டீஸ் மற்றும் பணம் விநியோகிக்கப்பட்டுள்ளது. அதிகாரி வருவதை அறிந்து தப்பிச் செல்ல முயன்ற பாஜக நிர்வாகிகளை விரட்டி பிடித்த ஆட்சியருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

பணம் விநியோகித்த பாஜக முக்கிய நிர்வாகி பணப்பையுடன் தப்பிவிட்ட போதிலும் கார் ஓட்டுநர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். பணப்பையுடன் தப்பிய நபரை வீடியோ பதிவுகளை கொண்டு ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். தன்னை கண்டதும் பணம் விநியோகித்த கார், விபத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் வேகமாக தப்பியதாக ஆட்சியர் கூறியுள்ளார்.

பணம் விநியோகித்தவர் பாஜக எம்எல்ஏ என காங். புகார்

தெரு விளக்குகளை அணைத்துவிட்டு பணம் தந்தது குல்பர்கா தெற்கு தொகுதி பாஜக எம்எல்ஏ தத்தாரேய பாட்டீல் ரேவூர் என காங்கிரஸ் புகார் கூறியுள்ளது. மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடும் பாஜக எம்எல்ஏ பணம் கொடுத்து வாக்குகளை பெற முயன்றதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

The post கர்நாடகத்தில் தெருவிளக்குகளை அணைத்துவிட்டு வாக்காளர்களுக்கு பணம் விநியோகம்; பாஜக நிர்வாகிகளை கையும் களவுமாக பிடித்த தேர்தல் அதிகாரி..!! appeared first on Dinakaran.

Tags : Karnataka ,BJP ,Bengaluru ,
× RELATED பாஜவுடன் இணையும் பேச்சுக்கே இடமில்லை:...