×

அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கும் மகத்தான திட்டமாகும்-குஜிலியம்பாறையில் அரசின் சாதனை விளக்க கூட்டத்தில் பேச்சு

குஜிலியம்பாறை : குஜிலியம்பாறை ஒன்றிய திமுக சார்பில் டி.கூடலூரில் கலைஞர் நூற்றாண்டு விழா, திராவிட மாடல் அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
ஒன்றிய சேர்மன் சீனிவாசன் தலைமை வகிக்க, காந்திராஜன் எம்எல்ஏ, ஒன்றிய அவை தலைவர் சம்பத் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கழக தீர்மானக்குழு தலைவரும், தலைமை கழக பேச்சாளருமான கவிஞர் தமிழ்தாசன் கலந்து கொண்டு பேசுகையில், கடந்த 2021 மே 7ல் தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற நாள் முதல் ஒவ்வொரு திட்டத்தையும் மக்கள் மனதில் கொண்டு நிறைவேற்றி வருகிறது நமது திராவிட மாடல் ஆட்சி.

மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து, புதுமை பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம், மக்களை தேடி மருத்தும், இல்லம் தேடி கல்வி, காலை சிற்றுண்டி திட்டம், நம்மை காக்கும் 48, எண்ணும் எழுத்தும் திட்டம், பேராசியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டம், விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டம் போன்ற பல்வேறு ஏற்றமிகு திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருவதால், இந்தியாவிலேயே தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்கி வருகிறது.

புதிய முதலீடுகள், அதிக தொழிலகங்கள் என அனைத்து பகுதிகளுக்குமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. எதிர்வரும் செப்டம்பர் 15 பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் முதல் குடும்பத்தலைவியருக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமை தொகை வழங்கப்பட இருக்கிறது. அரசு பள்ளியில் பயிலும் 1 முதல் 5ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நடைமுறைப்படுத்தியது திராவிட மாடல் ஆட்சியின் ஒரு மகத்தான சாதனையாகும். திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட பல்வேறு மக்கள் நலத்திட்டங்களில் இத்திட்டம் குழந்தை தொழிலாளர்களை ஒழித்து சிறப்பை பெற்றுள்ளது.

இதுபோன்ற திட்டங்களால் அதிகளவு மாணவர்கள் அரசு பள்ளியை நாடி வரும் சூழலை வழிவகுத்துள்ளது. கூலி தொழிலாளர்களாக உள்ள பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி அளிக்க வேண்டும் என்ற கவலையில் இருந்து நீங்குவதுடன் அவர்களின் கூடுதல் சுமையை குறைக்கிறது இத்திட்டம். மேலும் இத்திட்டத்தால் தமிழ்நாட்டின் உணவு தானிய உற்பத்தியானது அதிகரித்து விவசாயிகளின் பொருளாதாரமும் உயரும். இவ்வாறு பேசினார்.

இதில் முன்னாள் எம்எல்ஏ கிருஷ்ணன், நிர்வாகிகள் மாரிமுத்து, பொன்சுப்பிரமணி, சுமதி, கதிரவன், பழனிச்சாமி, கருப்பசாமி, கிருஷ்ணசாமி, இளங்கோவன், சிவபெருமாள், தங்கவேல், ஓம்சக்தி பழனிச்சாமி, வைரப்பெருமாள், செந்தில், மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ராஜ்குமார் நன்றி கூறினார்.

The post அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கும் மகத்தான திட்டமாகும்-குஜிலியம்பாறையில் அரசின் சாதனை விளக்க கூட்டத்தில் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Kujiliamparai ,Kujiliyamparai ,Kujiliyamparai Union DMK ,D. Kudalur ,Dravida ,
× RELATED குஜிலியம்பாறை அருகே 5,000 ஆண்டு பழமையான கல் பதுகை கண்டுபிடிப்பு