×

தென்கிழக்கு சீனக் கடற்படை பகுதியில் கூட்டுப் போர் பயிற்சி: சீனாவின் மிலிஷியா போர்க்கப்பல் கண்காணித்ததாக புகார்..!!

சீனா: தென்கிழக்கு சீனக் கடற்பகுதியில் நடந்த ஆசியா பயிற்சியின் போது போர்ஒத்திகையை சீன கப்பல்கள் கண்காணிக்க முயன்றதாக புகார் எழுந்துள்ளது. இந்தியா, பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா, சிங்கப்பூர், மலேஷியா, தாய்லாந்து மற்றும் வியட்னாம் நாடுகள் கூட்டாக இணைந்து தென்கிழக்கு சீனக் கடற்பகுதியில் போர் ஒத்திகை பயிற்சி மேற்கொண்டனர்.

கடந்த 2ம் தேதி தொடங்கிய இந்த பயிற்சி நேற்று நிறைவடைந்தது. சீனாவின் அச்சுறுத்தலை தடுக்கும் வகையில் அன்டைநாடுகளுடன் இணைந்து இந்த கூட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் போர் ஒத்திகை பயிற்சியின் போது சீன போர்க்கப்பல் ஒன்று கண்காணிக்க முயன்றதாக புகார் எழுந்துள்ளது.

பயிற்சி நடந்த 291 கிலோ மீட்டர் தொலைவில் சீனாவின் மிளிஷியா வகை கப்பல் தென்பட்டதாக கூறப்படுகிறது. சீன கப்பல் நெருங்கி வந்தாலும் பயிற்சியை தடுக்கவில்லை என்று கூறிய பாதுகாப்பு அதிகாரிகள் அதே சமயம் அந்த கப்பலின் செயல்பாடுகள் தொடர்ந்து கண்காணித்து வந்ததாகவும் தெரிவித்த்துள்ளனர்.

The post தென்கிழக்கு சீனக் கடற்படை பகுதியில் கூட்டுப் போர் பயிற்சி: சீனாவின் மிலிஷியா போர்க்கப்பல் கண்காணித்ததாக புகார்..!! appeared first on Dinakaran.

Tags : Southeast Chinese Naval ,China ,Asia ,South East China Sea.… ,South East China ,Navy ,Dinakaran ,
× RELATED மகளிர் ஆசிய கோப்பை 2024: ஜூலை 21ம் தேதி இந்தியா – பாகிஸ்தான் மோதல்!