×

காஸாவில் இஸ்ரேலிய வான்படையின் ராக்கெட் தாக்குதல்: இஸ்லாமிக் ஜிகாத் அமைப்பின் 3 முக்கிய தளபதிகள் உள்பட 12 பேர் உயிரிழப்பு

காஸா: இஸ்ரேலிய வான்படை நடத்திய ராக்கெட் தாக்குதலில் பாலிஸ்தீனத்தை சேர்ந்த இஸ்லாமிக் ஜிகாத் இயக்கத்தின் 3 முக்கிய தளபதிகள் உட்பட 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதனால் இஸ்ரேலிய பாலிஸ்தீன எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது. காஸாவில் காமாஸ் இயக்கத்தினர் மீது இஸ்ரேலிய ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றது. பதிலுக்கு காமாஸ் இயக்கத்தினர் மற்றும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் இயங்கும் 2-வது பெரிய இயக்கமான இஸ்லாமிக் ஜிகாத் அமைப்பினரும் தாக்குதலை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இன்று அதிகாலை காஸாவில் உள்ள ஒரு கட்டிடத்தின் மீது இஸ்ரேலிய வான்படை ராக்கெட் குண்டுகளை வீசியது.

அந்த கட்டிடத்தில் பதுங்கி இருந்த இஸ்லாமிக் ஜிகாத் அமைப்பின் மூத்த தளபதி, அவரது மனைவி மற்றும் 2 முக்கிய தளபதிகள் மற்றும் அவர்கள் குழந்தைகள் என மொத்தம் 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதனால் இஸ்ரேல் காஸா எல்லையில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது. கடந்த வாரம் இஸ்ரேலிய சிறையில் பாலஸ்தீன போராளி ஒருவர் உயிரிழந்தார். இதை தொடர்ந்து காஸா எல்லையில் ஆயுதம் தாங்கி குழுக்கள் தாக்குதலை தொடர்ந்தனர். இச்சூழலில் இன்று அதிகாலை இஸ்ரேல் வான்படை 3 தளபதிகளை கொன்று இருப்பது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடத்த ஜனவரி முதல் தற்போது வரை 90 பலஸ்தீனர்களும், 10 இஸ்ரேலியர்களும் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post காஸாவில் இஸ்ரேலிய வான்படையின் ராக்கெட் தாக்குதல்: இஸ்லாமிக் ஜிகாத் அமைப்பின் 3 முக்கிய தளபதிகள் உள்பட 12 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Gaza ,Islamic Jihad ,Palestine ,Dinakaran ,
× RELATED பிரான்ஸ் பல்கலை.யில் இருந்து பாலஸ்தீன ஆதரவு மாணவர்கள் வெளியேற்றம்