×

அமெரிக்காவில் அரங்கேறிய தமிழர்களின் பாரம்பரிய பறையிசை: சிலம்பம், துடுப்பு இசை உள்ளிட்டவற்றை ரசித்த மக்கள்..!!

அமெரிக்கா: தமிழர்களின் பாரம்பரிய இசையான பறையிசைஅமெரிக்க மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மே 1 முதல் 14ஆம் தேதி வரை அங்கு பாரம்பரிய மாதம் கொண்டாடப்படும். அமெரிக்காவில் வசிக்கும் ஒவ்வொரு நாட்டினரும் தங்கள் நாட்டின் கலை திறன்களை போற்றும் வகையில் இசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சிகளை நடத்துவர். இந்த ஆண்டு முதல் முறையாக தமிழர்களின் வீரம் செறிந்த பாரம்பரியத்தை விளக்கும் பறையிசை, துடுப்பு இசை, சிலம்பம், சுருள் வாள் ஆகியவை பாரம்பரிய கலைநிகழ்ச்சியில் இடம்பிடித்தன.

பொதுவாக ஜப்பான், கொரியா, பிலிப்பைன்ஸ் நாடுகளின் இசை மற்றும் நிகழ்ச்சிகளை அதிகம் ரசிக்கும் அமெரிக்கர்கள் இந்த முறை தமிழர்களின் வாழ்வியலுடன் ஒன்றிணைந்த பறையிசை மற்றும் சிலம்பாட்ட நிகழ்ச்சியில் மனதை பறிகொடுத்தனர். சிலம்பாட்டமும், பறையிசையும், அமெரிக்கர்களை வெகுவாக ஈர்த்துவிட்டதாக நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த டல்லாஸ்பையில் அமைப்பினர் தெரிவித்தனர்.

The post அமெரிக்காவில் அரங்கேறிய தமிழர்களின் பாரம்பரிய பறையிசை: சிலம்பம், துடுப்பு இசை உள்ளிட்டவற்றை ரசித்த மக்கள்..!! appeared first on Dinakaran.

Tags : America ,
× RELATED இந்தியாவில் தற்போதைக்கு டெஸ்லா...