×

எம்எல் தேரி பகுதியில் நதிநீர் இணைப்பு திட்டப்பணி

சாத்தான்குளம், மே 9: சாத்தான்குளம் அருகே எம்எல் தேரி பகுதியில் முடிவுறும் நிலையில் உள்ள திட்டப்பணிகளை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், சட்டபேரவை தலைவர் அப்பாவு பார்வையிட்டு ஆய்வு நடத்தினர். அப்போது அதிகாரிகளிடம் பணிகளை துரிதப்படுத்தி உத்தரவிட்டனர். நெல்லை மாவட்டம் நாங்குனேரி, ராதாபுரம், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்ட பகுதி வறட்சியான பகுதி என்பதால் இப்பகுதி பயன்பெறும் வகையில் தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு நதிநீர் இணைப்பு திட்டம் தொடங்கப்பட்டு பணிகள் நிறைவுறும் வகையில் உள்ளது. இந்நிலையில் சாத்தான்குளம் அருகே உள்ள எம்எல் தேரி பகுதியில் நடந்து வரும் குளம், பாலம், வாய்க்கால் அமைக்கும் பணிகளை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தமிழக சபாநாயகர் அப்பாவு ஆகியோர் நேற்று பார்வையிட்டனர்.

அப்போது பொதுப்பணி துறை அதிகாரிகளிடம் திட்டப்பணி, மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தனர். பணிகளை துரிதப்படுத்தி விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். முன்னதாக திசையன்விளை வட்டார விவசாய சங்கத்தினர் அணைக்கரையில் இருந்து மழை நீர் பகுதியில் புதிய கால்வாய் அமைக்க வேண்டும். இதன்மூலம் திசையன்விளை பகுதியில் 10 குளங்கள் பயன்பெறும், அப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் உயரும் எனவும், கோட்டை கருங்குளம், குட்டம் வழியாக புத்தன்தருவை குளத்துக்கு தண்ணீர் வரும் வகையில் திட்டம் உள்ளது. இதற்கு சுற்றுச்சூழல் ஆய்வு நடத்திட ₹1கோடியே 45 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்காமல் உள்ளது. அதனை துரிதப்படுத்தி விரைந்து முடிக்க வேண்டும். மேலும் இத்திட்டத்தில் அமைக்கப்பட்டு வரும் கால்வாயை மேலும் தூர்வாரி அமைக்க வேண்டும் எனவும் மனு அளித்தனர்.

அப்போது நெல்லை எம்பி ஞானதிரவியம், நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன், உதவி செயற்பொறியாளர் தனசேகரன், உதவி பொறியாளர்கள் ராமகிருஷ்ணன், ராம்சூரியா, தலைமை பொறியாளர் ஞானசேகர், கண்காணிப்பு பொறியாளர் செல்வராஜன், சாத்தான்குளம் தாசில்தார் தங்கையா, நெல்லை மாவட்ட ஊராட்சி தலைவர் விஎஸ்ஆர் ஜெகதீஸ், தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பாலமுருகன், மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் சங்கர், தெற்கு வட்டார தலைவர் லூர்துமணி, சாஸ்தாவிநல்லூர் விவசாய நலச்சங்க தலைவர் எட்வின் காமராஜ், வட்டார மனித நேய நல்லிணக்க பெருமன்ற செயலாளர் மகாபால்துரை, உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

The post எம்எல் தேரி பகுதியில் நதிநீர் இணைப்பு திட்டப்பணி appeared first on Dinakaran.

Tags : Theri ,Chatankulam ,Water Resources Minister ,Durai Murugan ,ML Theri ,Dinakaran ,
× RELATED கனிமொழி பற்றி அவதூறு: பாஜ பிரமுகர் கைது