×

கள்ளச்சாரய விற்பனையை தடுக்க வேண்டும்: குறைத்தீர்வு கூட்டத்தில் கிராம மக்கள் புகார்

ஆரணி, மே.9: ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வாரந்திர மக்கள் குறைத்தீர்வு கூட்டம் ஆர்டிஓ தனலட்சுமி தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில், நேர்முக உதவியாளர் குமாரவேலு மற்றும் பிறதுறை அதிகாரிகள் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து, ஆர்டிஓ தனலட்சுமி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று விசாரணை நடத்தினார். அப்போது, படவேடு ஊராட்சிக்குட்பட்ட மல்லிகாபுரம், கமண்டலாபுரம் ஆகிய கிராம மக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: மேற்கண்ட கிராமங்களில் 350-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். ஜமுனாமரத்தூர் தாலுக்கா கானமலை ஊராட்சிக்குட்பட்ட எல்லந்தம்பட்டு கிராமத்தில் உண்ணாமலை என்பவர் கள்ளச்சாராயம் விற்கிறார்.

இதுகுறித்து, கிராமமக்கள் காவல்துறையிடம் தகவல் தெரிவித்தால், உண்ணாமலையின் மகன் சாமிநாதன் ஆரணி நகர காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருவதால், என்னை ஒன்றும் செய்ய முடியாது, மீறி புகார் அளிப்பவர்களை ஒழித்து விடுவேன் என கொலை மிரட்டல் விடுத்து வருகிறார். எனவே, உண்ணாமலை, சாமிநாதன் மீது துறை ரீதியான நடவடிக்கை கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் தெரிவித்தனர்.

இதேபோல், கூட்டத்தில், ஆக்கிரமிப்பு அகற்றுதல், இலவச விட, காலை உணவு திட்டத்தில் பணி, ஏரிக்கரை தார்சாலை வசதி, பேருந்து வசதி, மின்மாற்றி இடமாற்றடம் ஊராட்சிமன்ற தலைவர் மீது புகார் மனு, அணை கட்ட கோரி உள்ளிட்ட 81 கோரிக்கை மனுக்களை பொதுமக்களிடமிருந்து ஆர்டிஒ தனலட்சுமி பெற்று விசாரித்து சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

The post கள்ளச்சாரய விற்பனையை தடுக்க வேண்டும்: குறைத்தீர்வு கூட்டத்தில் கிராம மக்கள் புகார் appeared first on Dinakaran.

Tags : Arani ,Arani Revenue Commissioner ,RTO Thanalakshmi ,
× RELATED தெள்ளார் அருகே நிலத்தகராறில் விவசாயி...