×

பிளஸ் 2 தேர்வு முடிவு: கந்தர்வகோட்டை பகுதியில் அரசு பள்ளிகள் அசத்தல்

கந்தர்வகோட்டை, மே9: கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பயின்று வரும் 12ம் வகுப்பு மாணவ, மாணவிகள் 12ம் வகுப்பு தேர்வில் அதிகளவு மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். கந்தர்வகோட்டை ஒன்றியத்தில், கந்தர்வகோட்டையில் அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தச்சன்குறிச்சி மேல்நிலைப்பள்ளி, பெருங்களூர் மேல்நிலைப்பள்ளி, ஆதனக்கோட்டை மேல்நிலைப்பள்ளி, கல்லாக்கோட்டை மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் பயின்ற 12ம் வகுப்பு மாணவ- மாணவிகள் சமீபத்தில் நடைபெற்ற பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகளில் தேர்வு எழுதி அதிகளவு மதிப்பெண்கள் எடுத்து அனைவரும் தேர்ச்சி பெற்றனர். இவர்களை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியைகள் இனிப்பு வழங்கி பாராட்டினர்.

மேலும் கந்தர்வகோட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற அனுஷ் என்கின்ற மாணவர் கணினி அறிவியல் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்ணும், அதேபோல் புவியியல் பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண்ணும் பெற்று மாநில அளவிலான பட்டியலில் முன்னிலையில் உள்ளார். அவருக்கு பள்ளி தலைமையாசிரியர் சால்வை அணிவித்து பாராட்டினார்.

The post பிளஸ் 2 தேர்வு முடிவு: கந்தர்வகோட்டை பகுதியில் அரசு பள்ளிகள் அசத்தல் appeared first on Dinakaran.

Tags : Waving Government Schools ,Kandarvakotta Region ,Kandarvakotta ,Kandarvakotta Union ,Kandarwakotta Region ,Dinakaran ,
× RELATED கந்தர்வகோட்டை அருகே கிணற்றில் தவறி விழுந்த வாலிபர் பலி