×

வடுகப்பட்டி, மாத்தூரில் இன்று மின் நிறுத்தம்

விராலிமலை, மே9: விராலிமலை அருகே உள்ள வடுகப்பட்டி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான வடுகப்பட்டி, வேலூர், கத்தலூர், குளவாய்பட்டி,முல்லையூர், புதுப்பட்டி, அக்கல்நாயக்கன்பட்டி,சூரியூர், மதயானைப்பட்டி, திருநல்லூர், சாத்திவயல், பேராம்பூர்,கல்லுப்பட்டி, மலம்பட்டி, ஆலங்குடி, சீத்தப்பட்டி, வளதாடிப்பட்டி,சித்தாம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மே 9ம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்று விராலிமலை, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியுள்ளார்.

மாத்தூர் பகுதி: விராலிமலை ஒன்றியம், மாத்தூர் துணை மின் நிலையத்தில் இருந்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: மாத்தூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே இங்கிருந்து மின் விநியோகம் பெறும் மாத்தூர் டவுன் மற்றும் அதற்கு உட்பட்ட இண்டஸ்ட்ரியல் பகுதி, குண்டூர் பர்மா காலனி, பழைய மாத்தூர், கைனாங்கரை, சிட்கோ இன்டஸ்ட்ரியல் எஸ்டேட், ராசிபுரம், குமாரமங்கலம், தேவளி, ஆவூர்,சாமி ஊரணிபட்டி,மலையேறி, ஆம்பூர்பட்டி, நால்ரோடு, புதுப்பட்டி ,செங்களாக்குடி, சீத்தப்பட்டி,குளவாய்பட்டி, துறைக்குடி, முள்ளிப்பட்டி, பிடாம்பட்டி, திருமலைசமுத்திரம், வங்காரம் பட்டி,சஞ்சீவிராயர் கோவில் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று தமிழ்நாடு மின்வாரிய மாத்தூர் செயற்பொறியாளர் பிரேம் ஆனந்த் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post வடுகப்பட்டி, மாத்தூரில் இன்று மின் நிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : Vadugapatti, Mathur ,Viralimalai ,Vadugapatti ,Dinakaran ,
× RELATED விராலிமலை சந்தையில் ₹1.50 கோடிக்கு ஆடுகள் விற்பனை