×

பந்தலூரில் திமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்

 

பந்தலூர்,மே9:பந்தலூர் மேற்கு ஒன்றியம் சார்பில் தமிழ்நாடுஅரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பந்தலூர் மேற்கு ஒன்றியம் கொளப்பள்ளி பஜாரில் நேற்று தமிழ்நாடு அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் ஒன்றிய செயலாளர் சிவானந்தராஜா தலைமையில் நடைப்பெற்றது. கிளை செயலாளர் தினகரன் வரவேற்றார். நிகழ்ச்சியில் மாநில விவசாய தொழிலாளர்அணி துணை செயலாளர் மற்றும் முன்னாள் எம்எல்ஏ அருண்குமார் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

கூட்டத்திற்கு ஒன்றிய துணை செயலாளர்கள் குழந்தைவேல்,பாக்கியநாதன்,சந்திரா,மாவட்ட பிரதிநிதி கணபதி,சேரங்கோடு ஊராட்சி மன்ற துணை தலைவர் மற்றும் மாவட்ட பிரதிநிதி சந்திரபோஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளர்களாக தலைமை செயற்குழு உறுப்பினர் காசிலிங்கம்,கூடலூர் ஒன்றிய செயலாளர் லியாகத் அலி,நெல்லியாளம் நகர செயலாளர் சேகரன்,கிழக்கு ஒன்றிய செயலாளர் சுஜேஷ்,மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் ஆலன்,பொதுக்குழு உறுப்பினர் மாங்கோடு ராஜா,மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் நவுபுல்,முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர் கோமதி,நெல்லியாளம் நகர துணை தலைவர் மற்றும் வழகறிஞர் சிவப்பரமணி,வழக்கறிஞர் சந்திரபோஸ்,வழக்கறிஞர் குயில் அரசன்,  வடிவேலன்,மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் சரவணன்,மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் செந்தில், ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள்பாரதி,பத்மினி,வார்டு உறுப்பினர் முத்துசாமி,ஒன்றிய தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் தினேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.இறுதியாக ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் சிவசங்கர் நன்றி கூறினார்.

The post பந்தலூரில் திமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் appeared first on Dinakaran.

Tags : DMK government ,Bandalur ,Bandalur West Union ,Government of Tamil Nadu ,Dinakaran ,
× RELATED அத்திக்குன்னா பகுதியில் பூமியில்...