×

பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு விஜயகாந்த் வாழ்த்து

சென்னை: பிளஸ் 2 பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். 600க்கு 600 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்த மாணவி நந்தினிக்கு மனப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். மாணவர்களை விட மாணவிகள் 4.93% அதிகம் தேர்ச்சி பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தேர்ச்சி பெறாத மாணவர்கள் தோல்வியை கண்டு துவண்டு விடாமல் நம்பிக்கையோடு இருக்க வேண்டும். கடின முயற்சி செய்து படித்து மறுதேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கிறேன்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு விஜயகாந்த் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Vijayakanth ,CHENNAI ,DMUDI ,President ,Dinakaran ,
× RELATED விஜயகாந்த் நினைவிடத்திற்கு போலீஸ்...