×

திருநள்ளாறில் பிரம்மோற்சவ விழா: தர்பாரண்யேஸ்வரர் கோயில் தேர்கள் சீரமைக்கும் பணி மும்முரம்

காரைக்கால்,மே9: திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் பிரம்மோற்சவ தேரோட்டம் நடைபெறவுள்ளதை முன்னிட்டு தேர்களை சீரமைக்கும் வேலைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு உள்ள உலகப்பிரசித்தி பெற்ற  தர்பார்னேஸ்வரர் தேவஸ்தானம்  சனீஸ்வர பகவான் கோயிலில் ஆண்டு பிரமோற்சவம் வெகு சிறப்பாக நடைபெறும். நிகழாண்டு பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வாக தேர் திருவிழா பந்தக்கால் கடந்த 5ம் தேதி நடைபெற்றது. பிரமோற்சவம் முக்கிய நிகழ்ச்சிகளான கொடியேற்றம் வரும் 16ம் தேதியும், தியாகராஜர் ஆட்டம் எனப்படும் உன்மத்த நடனம் மே 27ம் தேதியும், திருத்தேர் வடம் பிடித்தல் மே 30யும் நடைபெற உள்ளது.

இதனால் ஐந்து ரத தேர்களான நீலோத்பாலாம்பாள், விநாயகர், சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர், செண்பக தியாராஜ சுவாமி, ஆகிய சுவாமிகள் தனித்தனி தேர்களில் எழுந்தருளி தேரோட்டம் நடைபெறும். இதையொயொட்டி 5 தேர்களையும் சீர்படுத்தி அழகுப்படுத்தும் வேலைகளில் கோவில் ஊழியர்கள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

The post திருநள்ளாறில் பிரம்மோற்சவ விழா: தர்பாரண்யேஸ்வரர் கோயில் தேர்கள் சீரமைக்கும் பணி மும்முரம் appeared first on Dinakaran.

Tags : Brahmotsava festival ,Thirunallar ,Darbaranyeswarar Temple ,Karaikal ,Brahmotsava Chariot ,Tirunallaru Darbaranyeswarar Temple ,Karaikal District ,Tirunallaar Brahmotsava Festival: Darbaranyeswarar Temple Chariot Repair ,
× RELATED திருவள்ளூர்  வைத்திய வீரராகவர்...