×

ஆக்சிஜன் சிலிண்டர் அணிந்து ஒரு மரம் நடுவோம் விழிப்புணர்வு

 

கோவை, மே 9: கோவையை சேர்ந்த வ.உ.சி சேவா அறக்கட்டளையினர் ஒரே ஒரு மரம் நடுவோம், நாளைய தலைமுறை காப்போம் என்பதை வலியுறுத்தும் வகையில் மாதிரி ஆக்சிஜன் சிலிண்டரை முதுகில் அணிந்தவாறு விழிப்புணர்வை துவக்கி உள்ளனர். அடுத்த தலைமுறை மாசற்ற காற்றை சுவாசிப்பதை உறுதி செய்யும் வகையிலும் காற்றை காசு கொடுத்து வாங்கும் சூழ்நிலை உருவாகிவிட கூடாது என்பதை வலியுறுத்தும் வகையிலும் மாதிரி ஆக்சிஜன் சிலிண்டரை அணிந்தவாறு விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவெடுத்துள்ளனர்.

இதன் முதல் நிகழ்வாக கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு மாதிரி ஆக்சிஜன் சிலிண்டரை முதுகில் பொருத்தியவாறு பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இது குறித்து அவர்கள் கூறுகையில்,“இனி வரும் நாட்களில் இது போன்ற விழிப்புணர்வு வாரம் தோறும் பல்வேறு இடங்களில் நடத்தப்படும். சாலை விரிவாக்க பணிகளுக்காக சாலையோரங்களில் இருக்கின்ற மரங்களை வெட்டினால் அதற்கு ஈடாக கூடுதல் மரங்களை வேறு இடங்களில் வளர்க்க வேண்டும். மேலும், அரசு மட்டுமல்லாமல், பொதுமக்களும் தாமாக முன்வந்து மரங்களை வளர்க்க வேண்டும்’’ என்றனர்.

The post ஆக்சிஜன் சிலிண்டர் அணிந்து ஒரு மரம் நடுவோம் விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,VUC Seva Trust ,Dinakaran ,
× RELATED கோவை வனத்துறை அதிகாரிகள் அலட்சியம்:...