×

தொற்றுநோய் பரவும் அபாயம் களமிறங்கிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மக்கள் பிரதிநிதியாக ஆட்சிபுரியும் முதல்வர் மு.க.ஸ்டாலின்

வேலாயுதம்பாளையம்,மே 9: கரூர் மாவட்டம் புகழூர் நகர திமுக சார்பில் திமுக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் புகழூர் 4 ரோடு பகுதியில் நடைபெற்றது. கூட்டத்தில், புகழூர் நகர திமுக அவைத் தலைவர் வாங்கிலி வரவேற்றார். நகராட்சி துணைத் தலைவர் பிரதாபன், மாவட்ட தொமுச தலைவர் அண்ணாவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். புகழூர் நகர செயலாளரும், புகழூர் நகராட்சி தலைவருமான சேகர் என்கிற குணசேகரன் தலைமை வைத்து பேசியதாவது: தமிழகத்தில் கடந்த 10ஆண்டு காலம் ஆட்சி நடத்தியவர்கள் அதிகாரம் செலுத்துவதற்கும், தங்களின் ஆதிக்கத்தை நிலை நாட்டுவதற்கும், மக்களை பயமுறுத்தியும் ஆட்சி செய்து கொண்டிருந்தனர். ஆனால் நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த 2 ஆண்டுகள் மக்களின் பொறுப்பை தான் ஏற்றுக் கொண்டு மக்களின் பிரதிநிதியாக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்.

ஆட்சிப் பொறுப்பை தந்த மக்களுக்கு உண்மையாகவும், அவர்களுக்கு நன்மை செய்வதற்காக எந்த நேரமும் பாடுபடும் முதலமைச்சருக்கு பொதுமக்களின் ஆதரவு என்றென்றும் தொடரும். திமுக ஆட்சி பொறுப்பேற்ற 2 ஆண்டுகள் முடிந்து 3வது ஆண்டு தொடங்கியுள்ளது. 2 ஆண்டுகளில் பொது மக்களுக்கு ஏராளமான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. விரைவில், குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்பட உள்ளது. கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள கோவில் நிலங்கள் மீட்கப்பட்டு வருகிறது. 24 மணி நேரமும் முதலமைச்சர் அயராது பொது மக்களுக்காக பாடுபட்டு வருகிறார். எண்ணற்ற நலத்திட்ட உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறார்.

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு அந்த மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு வருகிறது. தொடர்ந்து திமுக அரசுக்கு பொதுமக்கள் ஆதரவு அளிக்க வேண்டும். வரும் பாராளுமன்ற தேர்தலில் திமுக வேட்பாளர்களை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். பொதுமக்கள் எல்லோரும் என்றென்றும் திமுகவின் பக்கம் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில், பொதுக்குழு உறுப்பினர்கள் சாமிநாதன், சிவகாமி சண்முகம், தொழிற்சங்க செயலாளர் அண்ணா வேலு, மாவட்ட பொருளாளர் பாரத், மாவட்ட சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் நவாஸ்கான், மாவட்ட பிரதிநிதி தங்கராஜ், நகர துணைச் செயலாளர்கள் இம்ரான்கான், சண்முகம், சுதா மற்றும் மாவட்ட, ஒன்றிய, பேரூர் வார்டு பொறுப்பாளர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post தொற்றுநோய் பரவும் அபாயம் களமிறங்கிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மக்கள் பிரதிநிதியாக ஆட்சிபுரியும் முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin ,Velayuthampalayam ,DMK government ,Karur ,District Bukhazur City DMK ,Highways Department ,Dinakaran ,
× RELATED நபிகள் நாயகத்தின் அறிவுரைகளைப்...