
- அய்யனார் கோயில்
- ஆண்டு அபிஷேகம்
- புளியங்குடி அய்யனார்
- கூத்தப்பெருமாள் கோவில்
- முதுகுளத்தூர்
- Mudugulathur
- தின மலர்
சாயல்குடி, மே 9: முதுகுளத்தூர் அருகே புளியங்குடி அய்யனார், கூத்தப்பெருமாள் கோயில் வருடாபிஷேகம் நேற்று நடந்தது. முதுகுளத்தூர் அருகே புளியங்குடியில் கடந்தாண்டு பழமையான அய்யனார், கூத்தப்பெருமாள் கோயிலில் புதியதாக ராஜகோபுரம் அமைக்கப்பட்டது. இதன் முதலாம் ஆண்டு வருடாபிஷேகத்தை முன்னிட்டு அய்யனார், கூத்தப்பெருமாள், விநாயகர், கருப்பணசாமி, சேமக்குதிரைகள், பூதக்கணங்கள் மற்றும் கிராம தேவதைகள், பரிவாரங்களுக்கு யாகசாலை பூஜை செய்யப்பட்டு சாமி விக்கிரங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டது. பிறகு அய்யனார், கூத்தப்பெருமாள் உள்ளிட்ட சாமி சிலைகள், பரிவார, கிராம தேவதை சாமி விக்கிரங்களுக்கு சிறப்பு அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடந்தது. தொடர்ந்து அன்னதானம் நடந்தது. நிகழ்ச்சியில் எம்.பி தர்மர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
The post அய்யனார் கோயிலில் வருடாபிஷேகம் appeared first on Dinakaran.