×

நத்தம் செந்துறையில் புனித சூசையப்பர் ஆலய விழா துவக்கம்

நத்தம், மே 9: நத்தம் அருகேயுள்ள செந்துறையில் புனித சூசையப்பர் ஆலய திருவிழா நேற்று முன்தினம் மாலை கொடியேற்றத்துடன் துவங்கியது. துவரங்குறிச்சி பங்குத்தந்தை இன்னாசி முத்து கொடியேற்றி வைத்தார். ெதாடர்ந்து நேற்று காலை திருவிருந்து திருப்பலி நடந்தது. மாலையில் புனித செபஸ்தியார் வேண்டுதல், பொங்கல் வைத்தல் நடந்தன. இரவு 6 மணிக்கு திருப்பலியை தொடர்ந்து புனித செபஸ்தியார் வேண்டுதல் தேர் பவனி நடந்தது. பின்னர் அனைவருக்கும் அன்பின் விருந்து வழங்கப்பட்டது. இன்று (மே 9) மாலை பொது பொங்கல் வைத்தல், ஆடம்பர திருவிழா திருப்பலி மலாவி ஆப்பிரிக்கா பங்குத்தந்தை சூசைராஜ் தலைமையில் நடைபெறுகிறது.

இரவு கலை நிகழ்ச்சியும் நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாளை (மே 10ம் தேதி, புதன்கிழமை) அதிகாலை 3 மணிக்கும், மாலை 3 மணிக்கும் புனிதர்களின் தேர் நகர் வலம் வரும். இரவு திண்டுக்கல் வி.சி.குருசடி பங்குத்தந்தை ரூபன் ஞானசேகரன் தலைமையில் திருவிழா நிறைவு திருப்பலியும், கொடியிறக்கமும் நடைபெறும். திருவிழா ஏற்பாடுகளை செந்துறை பங்கு தந்தையர்கள் இன்னாசிமுத்து, பிரிட்டோ, மரிய பிரான்சிஸ் பிரிட்டோ மற்றும் செந்துறை பங்கு இறைமக்கள் செய்து வருகின்றனர்.

The post நத்தம் செந்துறையில் புனித சூசையப்பர் ஆலய விழா துவக்கம் appeared first on Dinakaran.

Tags : St. Susaiyappa Temple Festival ,Natham Senturai ,Nattam ,St. Susaiyappar Temple ,Sentura ,
× RELATED திண்டுக்கல்-நத்தம் ரோட்டில்...