×

ஜேஇஇ முதன்மை தேர்வில் ஆகாஷ் பைஜூஸ் மாணவர்கள் சாதனை

சென்னை: சென்னையை சேர்ந்த ஆகாஷ் பைஜூஸ் 18 மாணவர்கள், ஜாயின்ட் என்ட்ரன்ஸ் தேர்வில் (ஜேஇஇ) மெயின் 2023-ல் ஒட்டுமொத்தமாக 99 சதவீதம் மற்றும் அதற்கு மேல் பெற்றுள்ளனர். குறிப்பிடத்தக்க சாதனையாளர்கள் ஆதித்யா நீரஜே 99.99, பாவேஷ் எஸ் 99.94, ஆர்யன் பிரபு 99.91, சாய்கணேஷ் எஸ் 99.81 மற்றும் ஆதித்யா வெங்கட்ராமன் 99.75. சதவீதம் பெற்றுள்ளனர். மாணவர்களை வாழ்த்திப் பேசிய ஆகாஷ் பைஜூஸ் முதன்மை செயல் அதிகாரி அபிஷேக் மகேஸ்வரி, “ஜேஇஇ (முதன்மை) மாணவர்கள் தங்கள் மதிப்பெண்களை மேம்படுத்த பல வாய்ப்புகளை வழங்க இரண்டு அமர்வுகளில் நடத்தப்படுகிறது.

ஜேஇஇ அட்வான்ஸ்டு என்பது இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் (ஐஐடி) சேர்க்கைக்கு மட்டுமே என்றாலும், ஜேஇஇ மெயின் என்பது பல தேசிய தொழில்நுட்பக் கழகம் (என்ஐடி) மற்றும் இந்தியாவில் உள்ள பிற மைய உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கைக்கானது. ஜேஇஇ அட்வான்ஸ்டுக்கு அமர்வதற்கு மாணவர்கள் ஜேஇஇ மெயின் தேர்வு எழுத வேண்டும். ஆகாஷ் பைஜூஸ் உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு மிமிஜி-யிணிணி பயிற்சியை பல பாட வடிவங்களில் வழங்குகிறது.

சமீபத்திய காலங்களில், ஆகாஷ் கணினி அடிப்படையிலான பயிற்சியை வளர்ப்பதில் தனது கவனத்தை அதிகரித்தது. அதன் iTutor பதிவு செய்யப்பட்ட வீடியோ விரிவுரைகளை வழங்குகிறது. மாதிரி தேர்வுகள் உண்மையான தேர்வுக் காட்சியை உருவகப்படுத்துகின்றன, இதனால் மாணவர்களுக்குத் தேவையான பரிச்சயத்தையும் தேர்வை எதிர்கொள்வதில் நம்பிக்கையையும் அளிக்கிறது,’’ என்றார்.

The post ஜேஇஇ முதன்மை தேர்வில் ஆகாஷ் பைஜூஸ் மாணவர்கள் சாதனை appeared first on Dinakaran.

Tags : Akash Byjus ,JEE Main ,Chennai ,Akash Baijus ,Main ,Dinakaran ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...