×

பாலாற்று பம்ப் ஹவுஸ் வாசலில் உடைந்த நிலையில் காணப்படும் மின் கம்பம்: மாற்றியமைக்க கோரிக்கை

செங்கல்பட்டு: பாலாற்று பம்ப் ஹவுஸ்சுக்கு செல்லும் மின் கம்பம் சேதமடைந்து காணப்படுகிறது. இதனை உடனடியாக சீரமைத்து தரவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு அடுத்த பழவேலி அருகே பாலாற்றில் இருந்து ராட்சத மோட்டோர் மூலம் சுற்று வட்டார பகுதிகளான பழவேலி, திம்மாவரம் ஆத்தூர் பச்சையம்மன் கோயில் உள்ளிட்ட பகுதிகளில் வாழும் மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்வதற்கு இந்த பம்ப் ஹவுஸ் மூலம்தான் குடிநீர் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த பம்ப் ஹவுஸ் வாசலில் உள்ள மின் கம்பத்தின் மேல்பகுதி இரண்டு துண்டாக உடைந்து தனியாக தொங்கி கொண்டு நிற்கிறது.

இதுகுறித்து மின் வாரிய அலுலகத்தில் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எந்த நேரத்திலும் உடைந்து விழுந்துவிடும் நிலையில் உள்ளது. இதனால், உயிர் சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக பொதுமக்கள் அச்சம் அடைந்து வருகின்றனர். எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள், மின் கம்பத்தை உடனடியாக அகற்றிவிட்டு புதிய மின் கம்பத்தை அமைத்து தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post பாலாற்று பம்ப் ஹவுஸ் வாசலில் உடைந்த நிலையில் காணப்படும் மின் கம்பம்: மாற்றியமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Palatu Pump House ,Chengalpattu ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு பாலாற்றில் தடுப்பணை அமைக்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை