×

சீனாவில் முதல் முறையாக சாட்ஜிபிடி மூலம் போலி செய்தி பரப்பியவர் கைது

பீஜிங்: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இயங்கும் சாட்ஜிபிடி மூலமாக கதைகள், கட்டுரைகளை மிக எளிதாக உருவாக்க முடியும். இதனால் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சாட்ஜிபிடிக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில், சாட்ஜிபிடியை பயன்படுத்தி போலி செய்தி பரப்பியதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வடமேற்கு கன்சு மாகாணத்தை சேர்ந்த ஹாங் என்கிற நபர், சீனாவின் தேடுபொறி நிறுவனமான பைடுவால் நடத்தப்படும் பைஜியாஹோவில் ரயில் விபத்தால் 9 பேர் பலியானதாக போலி செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

20 வெவ்வேறு கணக்குகள் மூலமாக இந்த செய்தியை வைரலாக்கி உள்ளார். இதுபோல முன்பு சமூக வலைதளங்களில் வைரலான செய்திகளை சாட்ஜிபிடி மூலம் புதிதாக போலி செய்தியை உருவாக்கி தனது வலைப்பதிவு மூலமாக அவற்றை ஹாங் வைரலாக்கி வந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்த போலீசார் ஹாங்கை கைது செய்தள்ளனர். சாட்ஜிபிடியால் போலி செய்தி பரப்பியதாக சீனாவில் ஒருவர் கைதாவது இதுவே முதல் முறை.

The post சீனாவில் முதல் முறையாக சாட்ஜிபிடி மூலம் போலி செய்தி பரப்பியவர் கைது appeared first on Dinakaran.

Tags : China ,BEIJING ,Dinakaran ,
× RELATED உலக சவால்களை எதிர்கொள்ள ஜி 20...