×

தங்க சுரங்கத்தில் தீ விபத்து 27 தொழிலாளர் பரிதாப பலி

லிமா: தென் அமெரிக்காவில் உள்ள பெரு நாட்டின் லாஎஸ்பெ ரான்சா மாகாணம் அரேக்யூபா நகரில் தங்க சுரங்கம் இயங்கி வருகிறது. இந்த சுரங்கத்தில் தொழிலாளர்கள் வேலை பார்த்துக்கொண்டு இருந்தனர். அப்போது திடீரென அங்கு தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென சுரங்கம் முழுவதும் பரவியது. கடும் புகை மூட்டமும் ஏற்பட்டது. இது பற்றி அறிந்ததும் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பல மணி நேரம் போராடி அவர்கள் தீயை அணைத்தனர். இந்த தீயில் சிக்கி மூச்சு திணறியும், உடல் கருகியும் 27 தொழிலாளர்கள் பலியாயினர். உடல் கருகிய நிலையில் 2 பேர் மீட்கப்பட்டனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

The post தங்க சுரங்கத்தில் தீ விபத்து 27 தொழிலாளர் பரிதாப பலி appeared first on Dinakaran.

Tags : Lima ,Arecuba ,La Esperanza ,Peru ,South America ,Dinakaran ,
× RELATED மெஸ்ஸி அசத்தலில் அர்ஜென்டினா வெற்றி