×

மகளிர் டிஎன்பிஎல் நடத்த டிஎன்சிஏ திட்டம்

சென்னை: மகளிர் டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடரை நடத்த உள்ளதாக டிஎன்சிஏ அறிவித்துள்ளது. இது குறித்து, தமிழ்நாடு கிரிக்கெட் சங்க (டிஎன்சிஏ) தலைவர் அசோக் சிகாமணி செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: இந்தியாவில் மகளிர் கிரிக்கெட் வேகமாக வளர்ந்து வருகிறது. அதற்கு தமிழ்நாடு சிறந்த உதாரணம். கடந்தாண்டு நடந்த தேர்வு முகாமில் 400க்கும் அதிகமான வீராங்கனைகள் பங்கேற்றனர். எனவே மகளிர் கிரிக்கெட்டை தமிழக அளவில் மேலும் செம்மைப்படுத்தும் நோக்கில் மாவட்ட வாரியாக வீராங்கனைகள் தேர்வு செய்து ஆண்டு முழுவதும் சிறந்த பயிற்சியாளர்கள் கண்காணிப்பில் பயிற்சி அளிக்க டிஎன்சிஏ திட்டமிட்டுள்ளது.

மேலும், மகளிர் டிஎன்பிஎல் டி20 லீக் மற்றும் ஒருநாள் போட்டிகளை பெரிய அளவில் நடத்த திட்டமிட்டுள்ளோம். அதன் மூலம் வளரும் வீராங்கனைகளுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கும். அதன் ஒரு பகுதியாக மே 13-21 வரை தமிழகத்தில் உள்ள 37 மாவட்டங்களிலும் தேர்வு முகாம்கள் நடத்தப்படும். ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் அதிகபட்சமாக தலா 22 வீராங்கனைகளை தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளோம். இந்த முகாமில் தங்கள் திறனை சிறப்பாக வெளிப்படுத்தும் வீராங்கனைகள் மாவட்ட அணிகளிலும், தொடர்ந்து மாநில அணியிலும் இடம் பெற வாய்ப்பு கிடைக்கும். இவ்வாறு அசோக் சிகாமணி தெரிவித்தார்.

The post மகளிர் டிஎன்பிஎல் நடத்த டிஎன்சிஏ திட்டம் appeared first on Dinakaran.

Tags : DNPL ,Chennai ,DNCA ,Women's DNPL T20 Cricket Series ,Tamil Nadu Cricket Union ,Dinakaran ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...