×

உணவு பணவீக்கம் பல நாடுகளில் கவலைக்கிடமான நிலையில் இருந்தபோதும், அதனை இந்தியா திறம்பட கையாண்டதாக உலக புள்ளியியல் அறிக்கை

ஆம்ஸ்டர்டாம்: உணவு பணவீக்கம் பல நாடுகளில் கவலைக்கிடமான நிலையில் இருந்தபோதும், அதனை இந்தியா திறம்பட கையாண்டதாக உலக புள்ளியியல் அறிக்கை தெரிவித்துள்ளது. உலக நாடுகள் கொரோனா பெருந்தொற்று பரவலால் கடும் பொருளாதாரம் சரிவை சந்தித்தது. அதில் இருந்து மீள்வதற்கான நடவடிக்கைகளை அந்தந்த நாடுகள் மேற்கொண்டு வந்த சூழலில், கடந்த ஆண்டு திடீரென உக்ரைன் மீதான ரஷியா படையெடுப்பு வளர்ச்சி அடைந்த நாடுகளையும் பாதித்தது.

இந்த நிலையில், உலக புள்ளியியல் அமைப்பு வெளியிட்டு உள்ள தகவலில்:
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பணவீக்க விகிதங்கள், அந்நாடுகளின் சகிக்கும் திறனை காட்டிலும் அதிகரித்தது. கொரோனா பரவலுக்கு பின் பொருளாதார மீட்சிக்கு பல நாடுகள் போராடி வந்த சூழலில், உக்ரைன் பனிப்போரால் நிலைமை உலக பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய பகுதிகளில், உணவு பணவீக்கம் முறையே 8.5 சதவீதம், 19.1 சதவீதம் மற்றும் 17.5 சதவீதம் என்ற அளவில் உள்ளதாக உலக புள்ளியில் அமைப்பு தெரிவித்தது.

லெபனான், வெனிசுலா, அர்ஜெண்டினா மற்றும் ஜிம்பாப்வே ஆகிய நாடுகள் முறையே 352 சதவீதம், 158 சதவீதம், 110 சதவீதம் மற்றும் 102 சதவீதம் என்ற அளவில் உணவு பணவீக்க விகிதங்களை கொண்டு உள்ளன. எனினும், உணவு பணவீக்க விகிதங்களை இந்தியா திறம்பட கையாண்டு உள்ளது என பிரதமரின் பொருளாதார ஆலோசக கவுன்சிலின் உறுப்பினரான பேராசிரியர் ஷமிகா ரவி தனது டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.

அதனுடன், உலக புள்ளியியல் அமைப்பு வெளியிட்டு உள்ள பல்வேறு நாடுகளின் உணவு பணவீக்கம் பற்றிய தரவுகளையும் அதற்கு சான்றாக இணைத்து உள்ளார். இவற்றில் 5 சதவீதத்திற்கு குறைவான உணவு பணவீக்கம் கொண்ட நாடுகளின் வரிசையில், கடைசி 6 இடங்களில் உள்ள நாடுகளில் ஒன்றாக இந்தியாவும் உள்ளது கவனிக்கத்தக்கது.

இதன்படி, நாட்டின் ஒட்டுமொத்த உணவு பாதுகாப்பை நிர்வகிக்கும் வகையிலும், அதனுடன் உக்ரைன் போர் சூழலில், அண்டை நாடுகள் மற்றும் ஆபத்து நிலையிலுள்ள நாடுகளின் தேவைகளுக்காக, கடந்த ஆண்டு இந்தியாவின் ஏற்றுமதி கொள்கையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இதன் தொடர்ச்சியாக கோதுமை ஏற்றுமதியானது, தடை பட்டியலில் வகைப்படுத்தப்பட்டு, அது இன்றளவும் நடைமுறையிலும் இருந்து வருகிறது. கடந்த ஆண்டு உலகளவில் கோதுமை விலை கணிக்க முடியாத அளவுக்கு பெரிய அளவில் ஏற்ற, இறக்கத்துடன் மோசமடைந்து காணப்பட்டது. ஏனெனில், போர் நடந்து வரும் உக்ரைன் மற்றும் ரஷியா ஆகிய இரு நாடுகளுமே கோதுமை விநியோகத்தில் முன்னணியில் உள்ளன.

The post உணவு பணவீக்கம் பல நாடுகளில் கவலைக்கிடமான நிலையில் இருந்தபோதும், அதனை இந்தியா திறம்பட கையாண்டதாக உலக புள்ளியியல் அறிக்கை appeared first on Dinakaran.

Tags : India ,World Statistics ,Amsterdam ,
× RELATED களை கட்டிய மாம்பழ சீசன் பழக்கடைகளில்...