×

கட்டாய வெற்றி நெருக்கடி: பஞ்சாப்பை பழி தீர்க்குமா கேகேஆர்?

கொல்கத்தா: ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கும் 53வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் மோதுகின்றன. பஞ்சாப் 10 போட்டியில் 5 வெற்றி, 5 தோல்வி என 10 புள்ளிகளுடன் 7வது இடத்திலும், கேகேஆர் 4 வெற்றி, 6 தோல்வி என 8வது இடத்திலும் உள்ளன. பிளே ஆப் சுற்று வாய்ப்பை தக்க வைக்க இரு அணிகளுக்கும் கட்டாயம் வெற்றி தேவை என்ற நிலையில் களம் இறங்குகின்றன.

இதற்கு முன் மோதி உள்ள 31 போட்டியில் 20ல் கேகேஆரும், 11ல் பஞ்சாப்பும் வென்றுள்ளன. இந்த சீசனில் கடந்த ஏப். 1ம் தேதி மோதிய போட்டியில் கேகேஆருக்கு வெற்றி வாய்ப்பு இருந்த நிலையில் மழையின் அதிர்ஷ்டத்தால் பஞ்சாப் 7 ரன் வித்தியாசத்தில் வென்றது. அதற்கு பழிதீர்க்க கேகேஆர் இன்று போராடும்.

The post கட்டாய வெற்றி நெருக்கடி: பஞ்சாப்பை பழி தீர்க்குமா கேகேஆர்? appeared first on Dinakaran.

Tags : Forced ,KKR ,Punjab ,Kolkata ,IPL ,Eden Gardens, Kolkata ,Dinakaran ,
× RELATED சென்னை – பஞ்சாப் அணிகளுக்கு இடையே...