×

வெளுக்க வரும் மோக்கா புயல்…உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. : வானிலை ஆய்வு மையம்

சென்னை: தென்னிந்திய பகுதியில் உருவான வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்றும் ஒரிரு இடங்களில் கனமழை பெய்தது. இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென்கிழக்கு வங்கக் கடல், அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. அது 9ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடக்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக்கடல் மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் புயலாக மாறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.இந்த புயலுக்கு மோக்கா என பெயரிடப்பட்டுள்ளது.

புயல் வங்கதேசம் – மியான்மரை நோக்கி நகரும். புயல் முதலில் வடமேற்கு திசையிலும் பின்னர் வடகிழக்கு திசையிலும் நகர்ந்து செல்லும். காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாகி தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, நீலகிரி, கோவை, தென்காசி, விருதுநகர், சிவகங்கை, தேனி, மதுரை, திண்டுக்கல், திருப்பூரில் கனமழை பெய்யும். தமிழகத்தில் மே 1 முதல் தற்போது வரை இயல்பை விட 114% மழை பெய்துள்ளது.இயல்பு அளவான 8 செ.மீ.க்கு பதில் 1.5 செ.மீ. மழை பெய்துள்ளது.சென்னையில் மே 1-8 வரை இயல்பு அளவான 3 செமீ-க்கு பதில் 10 செ.மீ.(281%) மழை பெய்துள்ளது,”என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post வெளுக்க வரும் மோக்கா புயல்…உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. : வானிலை ஆய்வு மையம் appeared first on Dinakaran.

Tags : Bleaching Moka Storm ,Meteorological Research Center ,Chennai ,South Indian ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் நேற்று 4 இடங்களில்...