×

ஜெர்மனியில் கட்டப்பட்ட பழமையான பாலம் 2000 வெடிபொருட்கள் பொருத்தி தகர்ப்பு..!!

ஜெர்மனி: ஜெர்மனியில் பயன்பாட்டில் இருந்து கடந்த ஓராண்டுகாலமாக விளக்கிவைக்கப்பட்டிருந்த பழமையான பாலம் வெடி வைத்து தகர்க்கப்பட்டது. A45 பாலம் ஆனது நாட்டிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட நார்த் ரைன்-வெஸ்ட்பாலியாவின் மக்கள்தொகை கொண்ட ‘லேண்ட்’ இடையே சுமார் 50 நகர்ப்புற மையங்களைக் கொண்டுள்ளது மற்றும் நாட்டின் மிகப்பெரிய மோட்டார் சாலை சந்திப்பையும், பிரான்சின் எல்லையை ஒட்டிய அண்டை மாநிலமான சார்லாண்டையும் கடந்து செல்கிறது.

இந்த பாலம் 1968 – ஆம் ஆண்டு கட்டப்பட்டது. ஜெர்மனியில் உள்ள ரகமண்டே ஏன்டா ஆற்றின் குறுக்கே ஸ்டீல் மற்றும் கான்கிரீட்டை பயன்படுத்தி 17 டன் எடையில் போக்குவரத்துக்கு வசதிக்காக பாலம் கட்டப்பட்டிருந்தது. இந்த பழமையான மேம்பாலம் சிதினமடைந்ததை தொடர்ந்து அதனை அகற்ற மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். அதனை ஏற்று கடந்த ஓராண்டுகாலமாக பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்ட இந்த பாலம் 2000 வெடி பொருட்கள் பொருத்தி தரைமட்டம் ஆக்கப்பட்டது. இதன்போது அருகில் உள்ள கட்டிடங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பாலம் தகர்க்கப்பட்டதை தூரத்தில் இருந்தவர்கள் ஏராளமான மக்கள் கைதட்டி வரவேற்றும் படம் பிடித்தும் மகிழ்ந்தனர்.

The post ஜெர்மனியில் கட்டப்பட்ட பழமையான பாலம் 2000 வெடிபொருட்கள் பொருத்தி தகர்ப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Germany ,Dinakaran ,
× RELATED சில்லி பாய்ன்ட்…