×

கேரளாவை உலுக்கிய கோர விபத்து… குடியரசு தலைவர், பிரதமர் மோடி உள்ளிட்டோர் இரங்கல்; ரூ.2 லட்சம் நிவாரணம்!!

திருவனந்தபுரம் : கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் சுற்றுலா பயணிகள் சென்ற படகு கவிழ்ந்த விபத்தில் 7 குழந்தைகள் உட்பட 23 பேர் உயிரிழந்தனர். படகு விபத்து தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன், விபத்து குறித்து அறிந்து மிகவும் மனவேதனை அடைந்ததாக குறிப்பிட்டுள்ளார். மீட்புப் பணிகளை துரிதமாக மேற்கொள்ள மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டு இருப்பதாக கூறியுள்ளார் அவர், உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளார்.

கேரள படகு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இதே போல் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “படகு விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் குணமடைய பிரார்திக்கிறேன்,’எனத் தெரிவித்துள்ளார்.

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‘கேரளாவின் மலப்புரத்தில் படகு விபத்துக்குள்ளானதில் ஆழ்ந்த வருத்தம். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.” என தெரிவித்திருந்தார்,

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் , ‘கேரள மாநிலம் மலப்புரத்தில் படகு மூழ்கிய செய்தி வருத்தமளிக்கிறது. தங்களின் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும். மீட்புப் பணியில் அதிகாரிகளுக்கு உதவுமாறு காங்கிரஸ் தொண்டர்களிடம் நான் வேண்டுகோள் விடுக்கிறேன்.” என பதிவிட்டு இருந்தார்.

The post கேரளாவை உலுக்கிய கோர விபத்து… குடியரசு தலைவர், பிரதமர் மோடி உள்ளிட்டோர் இரங்கல்; ரூ.2 லட்சம் நிவாரணம்!! appeared first on Dinakaran.

Tags : President of the Republic ,Modi ,Thiruvananthapuram ,Malappuram district ,Kerala ,Kerallah ,
× RELATED கீழ்த்தரமான அரசியல்வாதி போல பிரதமர்...