×

வியாபாரிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி ஆதிரெங்கத்தில் பாரம்பரிய நெல்ரகங்களின் பெயர்கள் ஒப்பித்தல் போட்டி

திருத்துறைப்பூண்டி, மே 8: ஆதிரெங்கம் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையத்தில் பாரம்பரிய நெல் ரகங்களின் பெயர்கள் ஒப்பித்தல் போட்டியில் கலந்து கொள்ள மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இது குறித்து திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள ஆதிரெங்கம் நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மைய மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜுவ் கூறியதாவது: வரும் ஜூன் 17 மற்றும் 18-ம் தேதி புகழ்பெற்ற தேசிய நெல் திருவிழா நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் பல மாவட்டங்களில் இருந்தும் மாநிலங்களில் இருந்தும் உழவர்கள் பொது மக்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

மேலும் பாரம்பரிய நெல் ரகங்கள் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஐயா நெல் ஜெயராமன் அவர்கள் மீட்டெடுத்த பாரம்பரிய நெல் ரகங்களின் பெயர்கள் ஒப்பித்தல் போட்டி நடத்தப்பட உள்ளது, இதில் 15 வயதுக்குட்பட்ட மாணவர்கள் போட்டியில் பங்கு பெறலாம். அதிகமான பாரம்பரிய நெல் ரகங்களின் பெயர்கள் தங்கு தடையின்றி கூறும் மாணவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்படும். இதன் மூலம் வருங்கால இளைய தலைமுறையினருக்கு பாரம்பரிய நெல் ரகங்கள் குறித்த புரிதல் ஏற்படும். இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் விபரங்கள் குறித்து அறிந்து கொள்ள 9952787998,9443320954 ஆகிய செல்போன் எண்களை தொடர்பு கொள்ளலாம் என்றார்.

The post வியாபாரிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி ஆதிரெங்கத்தில் பாரம்பரிய நெல்ரகங்களின் பெயர்கள் ஒப்பித்தல் போட்டி appeared first on Dinakaran.

Tags : Adirangam ,Tiruthurapoondi ,Adirengam Traditional Rice Conservation Center ,
× RELATED திருத்துறைப்பூண்டி ஒன்றியத்தில்...