×

பேராவூரணி  நீலகண்ட பிள்ளையார் கோயிலில் தெப்ப உற்சவம்

பேராவூரணி, மே 8: தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி நீலகண்ட பிள்ளையார் கோயில் தெப்ப உற்சவம் ஆலய குளக்கரையில் நேற்று அதிகாலை நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.தஞ்சை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற நீலகண்ட பிள்ளையார் கோவில் சித்ரா பவுர்ணமி திருவிழா கடந்த ஏப், 26ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினசரி பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலா நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய இறுதி நிகழ்வான தெப்ப உற்சவம் நேற்று அதிகாலை நடைபெற்றது.

நள்ளிரவிலிருந்தே ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருக்குளக்கரையை சுற்றி சாமி தரிசனத்திற்காக காத்திருந்தனர். அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியர் அதிகாலை 3.20 மணிக்கு புறப்பட்டு திருக்குளத்தை மூன்று முறை வலம் வந்தார். சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை பெய்த மழையையும் பொருட்படுத்தாமல் சாமி தரிசனம் செய்தனர்.

The post பேராவூரணி  நீலகண்ட பிள்ளையார் கோயிலில் தெப்ப உற்சவம் appeared first on Dinakaran.

Tags : Theppa Utsavam ,Peravoorani ,Neelakanda Pillaiyar Temple ,Thanjavur District ,Pilliyar Temple ,Kulakarai ,Neelakanda Pilliyar Temple ,
× RELATED பேராவூரணி நீலகண்ட பிள்ளையார் கோயில் தேரோட்டம்