×

நெல்லைக்கு இன்று வருகைதரும் அமைச்சர் துரைமுருகனுக்கு வரவேற்பு மாவட்ட திமுக செயலாளர் அப்துல்வஹாப் எம்எல்ஏ அழைப்பு

நெல்லை, மே 8: நெல்லை திமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று வருகைதரும் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகனுக்கு நெல்லை புதிய பஸ் நிலையம் அருகே இன்று காலை சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதுகுறித்து நெல்லை மத்திய மாவட்ட திமுக செயலாளர் அப்துல்வஹாப் எம்எல்ஏ வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு முதல்வர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ‘திராவிட மாடல்’ அரசின் இரண்டாண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று, திமுக அரசின் இரண்டாண்டு சாதனைகளை விளக்கி சிறப்புரையாற்ற நெல்லைக்கு இன்று (8ம் தேதி) வருகைதரும் நீர்வளத்துறை அமைச்சரும், திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகனுக்கு நெல்லை மத்திய மாவட்ட திமுக சார்பில் இன்று (8ம் தேதி) திங்கட்கிழமை காலை 9 மணியளவில் புதிய பஸ் நிலையம் அருகேயுள்ள துதியின் கோட்டை முன்பாக நெல்லை மத்திய மாவட்ட திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.

இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் மாநில, மாவட்ட, மாநகர திமுக நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய‌, பேரூர், பகுதி நிர்வாகிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், வட்ட, கிளை நிர்வாகிகள், இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, தொழிலாளர் அணி, தொண்டர் அணி, பொறியாளர் அணி, வழக்கறிஞர் அணி, மகளிர் தொண்டர் அணி உள்ளிட்ட அனைத்து சார்பு அணியினர், திமுக முன்னோடிகள் திரளாகப் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அப்துல்வஹாப் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.

The post நெல்லைக்கு இன்று வருகைதரும் அமைச்சர் துரைமுருகனுக்கு வரவேற்பு மாவட்ட திமுக செயலாளர் அப்துல்வஹாப் எம்எல்ஏ அழைப்பு appeared first on Dinakaran.

Tags : District ,DMK ,Abdul Wahab ,MLA ,Minister ,Durai Murugan ,Nella ,Nellai ,Nellie ,Water Resources ,Duraimurugan ,
× RELATED தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுகவினர் நீர்மோர் பந்தல் அமைக்க வேண்டும்